பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/315

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



நல்வழி திரும்பிய திருடன் 305 ஆகையால் அவர்கள் போகும் இடமெல்லாம் கூடவே தாமும் திரிந்துக் கொண்டேயிருக்கிறார். சிறுகுளத் திலே தகுதியான வீடு நிலம் முதலியன வாங்கி குழந்தை துரைசாமி (நடராஐன்) பெயருக்கு எழுதி வைத்து விட்டார். அம்மையப்பபிள்ளையவர்கள் சிறுகுளத்திலேயே தங்கி முத்துஸ்வாமியய்யருக்கு ஓர் சிஷ்யரானார். பொழுது போகாவிட்டால் அவ்வூரார் அனைவரும் அவரைச் சூழ்ந்து கொள்ளுவார்கள். ஆடுசாபட்டி யின் மகத்துவத்தை அவர் சொல்ல ஆரம்பித்து விட்டால் ஆறு நாளானாலும் ஓயமாட்டார். தஸ்தா வேஜுகளிலே கூட ' நில வலயத்திற்கு ஓர் திலகம் போன்ற ஆடுசாபட்டியில் அவதரித்த அண்டர் புகழும் அஷ்டாவதானம் மகாவித்வான் அம்மையப்ப பிள்ளையவர்கள் ' என்றுதான் கையெழுத்து. ஆடுசா பட்டி என்பதற்கு ஆட்டுக்கு மோட்சம் கொடுத்த இடம் என்று பொருளாம். கஜேந்திராழ்வாருக்குப் போட்டியாக அஜேந்திராழ்வார் என்று ஒருவர் இருந் தார். அவருக்கு ஆடுசாபட்டியில் மோட்சமாம். இப்படி ஸ்தல புராணங்களை விஸ்தாரமாகப் பேசிக் கொண்டு அம்மையப்பபிள்ளையவர்கள் காலத்தை கடத்துகிறார். பேயாண்டித் தேவன் தன்னூர் சென்று அங்கு ராஜ்ய பரிபாலனம் செய்துவருகிறான். காலமே எழுந் ததும் முத்துஸ்வாமி அய்யரிருக்கும் திசையை நோக்கி ஒருதரம் நமஸ்கரித்த பிறகுதான் மற்றக் காரியங் களில் பிரவேசிப்பான். அந்தத் திருமங்கையாழ்வா ருக்கும் முத்துஸ்வாமியய்யர் ஏதோ அனுக்கிரஹித் திருப்பதால் அவரிடத்தில் அவனுக்கு தேவதா விசு வாசம். அவன் திருடுவதைக் கட்டோடு ஒழித்து விட்டான். 20