பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/318

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



308 கமலாம்பாள் சரித்திரம் யதாகாலஸ்திதோ நித்யம் வாயுஸ் ஸர்வத்ரகோமஹா ததா ஸர்வானி பூதாநி மத்ஸ்தா நித்யுபதாரய . - சர்வவியாபகமாயும் நிறைந்துமிருக்கிற வாயுவானது எப்போதும் எப்படி ஆகாசத்தில் இருக்கிறதோ அ. படி சகல பூதங்களும் என்னிடத்திலிருக்கிறதாக தெரிந்து கொள் என்றும், 'உலகம் யாவும் உயிர் பல வும் நானே, சிறிதும் வேறில்லை' என்றும் வாக்கு. கொடுத்திருக்கும் பகவானுடைய மகாவாக்கியத்தை விசாரணை செய்து உலகெல்லாம் அலகைத்தேரென தேர்ந்து, யூத நீயலைபொரிகளுமலையலை புந்தி ஏதநீயலையிவற்றினை மயங்கியானென்னும் போத நீயலையென் றிவையனைத்தும் போக்கிச் சோதியாகிய பிரஹயமே நீ எனச்சொன்ன குரு உபதேச விசேஷத்தால் பஞ் கோசத் திரைகளைப் பிளந்து பூரணமாய், ஏகமாய் அசலமாய், அசரீரியாய், அனாதியாய், ஆப்தமாய் நித திய நிர்க்குண நிராமய நிரஞ்சன நிராலம்ப நிர்விஷய மாய் விளங்காநின்ற சச்சிதானந்த ஸ்வரூபமாகிய ஆத்மாவைத் தரிசனம் செய்து, அகண்ட பிர்மமா காரன விஸ்வரூப விருத்தியிற் பிரவேசித்து திரிபுடி ரஹிதமான பிர்மமா நந்தத்தில் மூழ்கி, ஆத்மக்கிரீடை புரிந்து சமாதி நிஷ்டையில் நிர்வஹித்து, சமாதியொ ழிந்த சமயங்களில் பகவானுடையமாயவிபூதியை வியந்து ஒளியிலே, இருளிலே, வெளியிலே, மண் ணிலே, தண்ணிலே, மலையிலே, கடலிலே, கரையிலே மரத்திலே, மரத்தினிலையிலே, கனியிலே, காற்றிலே. கற்றார் கல்லாரிலே, கதியறியாக் கயவர் தம்மிலே, கட லன்ன ஜகமுழுதிலே - 'நீயலால் பிறிது மற்றின்மை சென்று சென்றணுவாய்த் தேய்ந்து தேய்ந்தென்றாந் திருப்பெருந்துறையுறை சிவனேயொன்று நீயல்லையன்றி யொன்றில்லை'