பிற் கூற்று. இப்பொய்க்கதையை இதுகாறும் பொறுத்தரு ளிய நேசர்காள்! நும்பெரும் பொறுமைக்கு, என் பெரும் வந்தனம். இக்கதை பெரும்பான்மையும் பலவித மனோ சஞ்சலத்தின் மத்தியில் எழுதப்பட்டதாதலால் அழகு குன்றி 'குன்றக்கூறன் மிகைப்படக்கூறல்' முதலிய யீரைங்குற்றங்களுக்கும் குடியாயுளது. மேலும் என் னறியாமையானும் பிறகாரணங்களாலும் சொற் பிழைகள் பலவடர்ந்து கற்றோர்க்கு விரசமாயுமுளது. ஆயினும் அவகாசம் முதலிய சில சாதனங்கள் ஏற் பட்டிருப்பின், அவை ஒருவாறு விலகியிருக்கலாம். இதுநிற்க இச்சரித்திரமெழுதுவதில் எனக்குக் கதையே முக்கிய கருத்தன்று. மற்றென்னையோ வெனில், ஆசையோடு உசாவும் அர்ச்சுனனுக்கு 'நாந்தோஸ்திம்மதிவ்யானாம் விபூதினாம்பரந்தப் அதாவது, இறந்தெவன் விபூதிக்கோ ரெல்லையின்மையின் பிறந்தன முடிவு பெறப்பேசவொண்ணுமோ' என்று பகவானாலேயே சொல்லிவிடப்பட்ட அவனது மாயாவிபூதியாம் பெருங்கடலுள் ஓர் அலையுள் , ஒர் நுரையுள், ஓர் துளியில், ஓர் அணுவை யானெடுத்து அதனுள் என் புல்லறிவிற் கெட்டிய மட்டும் புகுந்து பார்த்து,
பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/320
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை