பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/323

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



கமலாம்பாள் சரித்திரம் - 313 சிந்தையிலெழுத்து மொங்கிச் ஜகமெலா நிறைந்து தேங்கி' அந்தமில்லாததான ஆனந்தத்தில் மூழ்கித் திடமாகச் சிவானுபூதி பெற்றுச்சிவோஹமென்றிருந்து காலத்தை தள்ளுவோம். எந்த தெய்வத்தைத் தொழுது இச்சிறு கிரந்தமானது இயற்றப்பட்டதோ, எந்த சுயம்பிரகாசமான திவ்ய தேஜா ரூபத்தின் பொருட்டு இக்கதையானது நிஷ்காமியமாக அர்ப் பிக்கப்படுகிறதோ, அந்த திவ்விய, மங்கள , குணாதீத பரிபூரண சச்சிதானந்த ஸ்வரூபத்தை நாமனைவரும் முயற்சித்து அடை வோமாக. அடைந்து, அவருடைய குழைந்தைகளான மன் தலபாக்கியமாம். பாலர்க்குதவி செய்ய அடியார்க்கடியனாயிருந் துழைப்போமாக. ததாஸ்து.