பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



22 கமலாம்பாள் சரித்திரம் உனக்கும் உன் மாமியாருக்கும் என்ன நடந்தது என் றால் அவள் திட்டமாய்ச் சொல்லமுடியாது. ஆனால் பதினைந்து வருஷத்திற்கு இப்பால் இருந்தால் சகல சங்கதிகளுக்கும் அவள் மனதில் பதிவு ஏற்பட்டிருக் கும். ஆகையால் பதினாலு வருஷத்திற்கு முன் அவள் மாமியார் அவளை 'ஸாகஸி' என்று வைத அன்றைக்கு நடந்த சரித்திரத்தைச் சொல்லச் சொன்னால், அன் றைக்கு இன்ன கறி, இன்ன கூட்டு, மோர் புளித்ததா புளிக்கவில்லையா, இன்ன துவையல், யார் சமையல், அதில் இன்ன குற்றம், என்பதை நிர்ணயமாய், அப்பீ லுக் கிடமில்லாமல், சொல்லக்கூடிய திறமை அவளுக் குண்டு. இங்கிலீஷ் படிப்பவர்களுக்கு சுப்பம்மாளு டைய ஞாபகசக்தியில் பத்தில் ஒரு பங்கு இருந்தால் எம். ஏ., எம். எல்., பரீட்சைகளில் நிச்சயமாய்த் தேறி விடலாம். சுப்பம்மாளுக்கு யார் வீட்டிலாவது கலகம் நடந்தால் போதும். தனக்கு சாப்பாடுகூட வேண் டாம். - பகல் பன்னிரண்டு மணிக்கு, அவள் வீட்டில் ஒரு காங்கிரஸ்' மஹாசபை கூடும். அது சாயந்திரம் 6-மணி க்கு ஓய்ந்து மறுபடி இரவு 8-மணிக்குக் கூடும். அதற்கு விடுமுறைநாளே கிடையாது. அம்மகாசபைக்கு சுப் பம்மாள் தான் கனம் பொருந்திய அக்கிராசனாதிபதி அவர்கள். அவளுக்கு அந்தக் கௌரவபட்டத்தை பகி ரங்கமாகக் கொடுக்காவிட்டாலும் அப்பட்டத்திற் குரிய அதிகாரத்தை அவள் அனுபவிப்பதுமன்றி அதற் குரிய மரியாதையையும் எல்லாரும் முணுமுணுக்காமல் அவளுக்கே செலுத்திவந்தார்கள். அந்த மகா சபைக்கு ஏதாவது சமாசாரப்பத்திரிகை உண்டோ என்று சிலர் ஆவலுடன் வினாவலாம். ஆனால் அச்சிலடங்காத அனேக சங்கதிகளும், அச்சில் போடக்கூடாத அநேக ரகசியங்களுமே அந்த சபையில் முக்கியமாய் நடந்தேறி வந்தபடியால் அதற்கு சமாசாரப்பத்திரிகை