பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



5 'கலகநெருப்பு' இவ்வம்பர் மகாசபையின் அக்கிராசனாதிபதியா கிய சுப்பம்மாளை கமலாம்பாள் வீட்டிற்கு நெருப்பு வாங்க வந்தவிடத்தில் இவ்வளவு காலம் கௌரவக் குறைவாய் நிறுத்திவைத்த குற்றத்தை இதைப் படிப் பவர்கள் தயவுசெய்து மன்னிக்கவும். எங்கே சுப்பம் மாளை சாதாரண சுப்பம்மாள் ஆக நினைத்துவிடுகிறார் களோ என்று பயந்து அவளுடைய அந்தஸ்தையும் அதிகாரத்தையும் விஸ்தரித்து எழுதலானேன். சுப்பம் மாள், திண்ணையில் உட்கார்ந்திருந்த கிருஷ்ணய்யர், ராமஸ்வாமி சாஸ்திரிகள் இவர்களைக்கண்டு நாணின வள்போல் ஓரமாக ஒதுங்கி மேற் புடவையை இழுத் துப் போர்த்திக்கொண்டு வெகு மரியாதையாய் தலை குனிந்து உள்ளே சென்று கமலாம்பாளை நோக்கி ஏதோ ரகசியம் சொல்பவள் போல் மெதுவாய் 'உங்கள் மாமாவும் அவர் சம்பந்தியுமோ?' என, கமலாம்பாள் 'வாருங்கள்' என்று சொல்லி, அவர்கள் தான், இன்று தான் வந்தார்கள்' என்றாள். சுப்பம்மாள் உள்ளே போகும் பொழுது தலை குனிந்து சென்றாளே, அவள் எவ்விதம் திண்ணையில் உட்கார்ந்தவர்களைப் பார்த்திருக்கக்கூடும் என்று சிலர் சந்தேகிக்கலாம். 'மங்கையர் கண் பெருவிரலைப் பார்க் கும்போதே கடைக்கண் உலகெலாம் சுற்றும் என்பது பழமொழி. அப்படியே சுப்புவும் ஆந்தையின் விழி யையுடையவளானாலும் 'காதங்கள் கோடி கடை சென்று காணும்' கருடனிலும் அதிதீட்சணமான கடைக்கண் பார்வையையுடையவள். இவ்வளவு