23 கமலாம்பாள் சரித்திரம் - - கலகத்தில் இழுத்துவிடுவதில் அதிக திருப்தி. எப் பொழுது தனக்கு சமயம் கிடைக்குமென்று அதிக ஆவலுடன் எதிர்பார்த்திருந்த அவள் சாதாரண நெருப்பை மூட்டுவதோடு கூட கலக நெருப்பையும் அடியில் வருமாறு மூட்டத் தொடங்கினாள் :-- சுப்பு: 'நான் ஆத்தங்கயையில் (சுப்புவுக்கு ரகரம் வாயில் நுழையாது அதற்குப்பதில் அவள் யகரம்தான் சொல்லுவாள் என்று முன்னமேயே சொன்னோம். அந் தப் பரிபாஷையில் கொஞ்சம் பேசிப்பார்ப்போம்.) பொடவே தோச்சிக்கிண்டியிந்தேன். அங்கே குலுக்கி மினுக்கிக்கிண்டு தஞ்சாவூயா வந்தாள். ஒன் ஒய்ப்படி. நான் என் வாயிலே சனி இயுந்தது, வெயுன்னே இயக் காமல் அவளைப் பாய்த்து உங்க மச்சுனனாத்துத் திண் ணையிலே யாய் உக்காந்தியுக்கியா இன்னு ஒன்னைக் கேக்கல்யோ அதுபோலே கேட்டேன். அதுக்கு அவள் அது யாயுக்குத் தெயும், எவுயுக்குத் தெயும், கெணத் துத் தப்பளைக்கு நாட்டு வளப்பமேன். ஊய் (ஊர்) எழவெல்லாம் நமக்கு என்னத்துக்கு அப்பிடி இன் னாள் ; நான் 'என்ன டி-' கமலாம்பாள்: 'அவள் கிடக்கிறாள் பயித்தியக்காரி யார் சொல்லுகிறாள், அவள் தானே. இதை ஒரு வார்த் தையாக நீங்கள் சொல்லவேண்டுமா?' சுப்பு: ஆமா இந்த சாம்பியாஜ்யத்தை சொல்யத் துக்குத்தான் வாசல் விட்டு வாசல் வந்தேன். சொல் யேன் முழுக்கக்கேளு! அப்புயம் நீயே சொல்லுவே. அவளா பயித்தியக்காயி? பல்லுக்கு பாம்பிலே விஷம் (பாம்புக்கு பல்லில் விஷம் என்பதற்குப் பதிலாக) அவளுக்கு ஒடம்பெல்லாம் விஷம். ஒனக்கும் முத்ச் சாமிக்கும் வெளுத்ததெல்லாம் பாலு; பாகமாயபோது அவள் நகையை தியுடினது, கோட்டுக்கு (கச்சேரிக்கு) இயுத்துவிடத் தெயுஞ்சது. சியுபாடுவித்து வட்டிக்குப்