பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



ஜெல்லிக்கட்டு 33 அவர்கள் ஊரில் இல்லையே, என்ன செய்வீர்கள் , என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே சுந் தரம் ஓசைப் படாமல் பின்னே தாழ்ந்துகொண்டு வந்து முத்துஸ்வாமி அய்யரை ஒருமாட்டுத் தும்பால் கழுத்தில் கட்டி தூணில் இழுத்து மாட்டிவிட்டான். முத்துஸ்வாமி அய்யர் 'அடா விட்டுவிட்டா, நான் போகிறேன் விட்டுவிட்டா' என, சிறுவன் 'இல்லை யப்பா' என்றான். முத்துஸ்வாமி அய்யர், 'நான் இருக் கிறது என்கிறேன், நீ இல்லை என்கிறாயா? இதோ பாரடா தும்பு இருக்கிறதேயடா, அவிழ்த்து விட்டா' என, கமலாம்பாள் 'அப்படித்தான், அப்படித்தான், வேணும், நன்றாய் கட்டு, (தலையை அசைத்துக் கொண்டு) " அகப்பட்டுக்கொண்டாரே விட்டலபட்டர் அகப்பட்டுக் கொண்டாரே " என்று பல்லவி பாடத் தொடங்கினாள். அதற்குள் சுந்தரம் கொஞ்சம் தள்ளி நின்று கொண்டு 'பை, பை, டுர்ர்ரி, டுர்ர்ரி, நின்று குத்திக்காளை , டுர்ர்ரி ' என்றான். மதுரை, திருநெல்வேலி ஜில்லாக்களில் 'ஜெல்லிக் கட்டு' என்று ஒரு வேடிக்கை உண்டு. அது என்ன வெனில், இருநூறு முன்னூறு மாடுகளை ஒரு தொழு வில் அடையப்போட்டு அவற்றை ஒன்றொன்றாய் கழுத் தில் ஒரு உருமால் கட்டி வெளியில் விட்டுப் பிடிக் கிறதுதான். அது பட்டிக்காட்டு மனிதர்களுக்கு ஒரு பெரிய திருவிழாவாகையால் ஆயிரக்கணக்கான ஜனங் கள் வந்து கூடுவார்கள். ஜெல்லிக்கட்டு என்று சொல்லிவிட்டால் போதும், அவர்களுக்கு உண்டாகும் உற்சாகத்திற்கு எதுவும் ஈடு இல்லை. என்ன வேலை யிருந்தாலும் அதை யெல்லாம் போட்டுவிட்டு சந்தனப் பூச்சென்ன, மருக்கொழுந்து மாலைகளென்ன, சிவப்பு உருமால்களென்ன, கோடி வேஷ்டிகளென்ன, இவ்வித சம்பிரமங்களுடன் விரல்களில் எல்லாம் வெள்ளி மோதிரங்களைக் கணக்கில்லாமல் அணிந்துக்கொண்டு, கையில் 'சோட்டாத் தடி'களுடன் திரள் திரளாய்ப்