பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



புருஷர்கள் தான் நல்லவர்கள் - பரம சாதுக்கள் ' 37 - - என்றாள் . அவர் சுந்தரத்தைப் பார்த்து இரு' என்று சொல்லிவிட்டு, 'அப்படிச் சொன்னது யார்?' என்று கேட்க அவள் 'யார் சொல்லுவார்கள்? சொல்ல சுதந் தரமுள்ளவர்கள் தான்' என்றாள். அய்யர் உடனே முகம் சிவந்து ' ஆரம்பித்து விட் டாயா ஸ்தலபுராணம்! (பல்லைக் கடித்துக்கொண்டு) தெரியுமே உன் சங்கதி. கலகமே பிரதானம்' என்று கோபித்தார். 'என்னைச் சொல்லாவிட்டால் உங்களுக் குப் பொழுது போகாது' என்றாள் கமலாம்பாள். அதற்கு முத்துஸ்வாமி அய்யர் 'பெண்களுக்கே கலகம் தான் தொழில். சுத்த நாய்கள் அப்பா? அதி லும் நீ-' என்று சொல்லி முடிப்பதற்குள் அவள் சிரித்துக்கொண்டு 'புருஷர்கள் தான் நல்லவர்கள்பரம சாதுக்கள்!' என்றாள். அய்யர் அதிகரித்த கோபத் துடன், 'ஆமாம் புருஷர்கள் இப்படித்தான் கோளும் புரளியும் சொல்லிக்கொண்டு திரிகிறார்கள். அப்பா! இந்தப் பொம்மனாட்டிகளுடன் சகவாசம் செய்வதைக் காட்டிலும் கழுதைகளைக் கட்டி மேய்க்கலாம், சீ! ஓயாமல் இதே தொழிலா! நமக்கு நன்றாய் வந்து வாய்த்ததடா சனியன். எது சமயம் என்று பார்த் திருந்து கலகத்தை உண்டுபண்ணுகிறது. கொஞ்ச மாவது அறிவிருக்கிறதா பார், கலகக்கழுதை' என்று பல்லைக் கடித்துக்கொண்டு பலவாறு வையத் தொடங் கினார். கமலாம்பாள் : (சகிக்கமாட்டாமல் சற்று பதட் டத்துடன்) 'எடுத்ததற்கு எல்லாம் கோபம் என்றால் அப்புறம் என்ன செய்கிறது?' அய்யர் : 'வாயை மூடு, சனியனே! பண்ணுவதை எல்லாம் பண்ணிவிட்டு, எடுத்ததற்கெல்லாம் கோபித் துக்கொள்ளுகிறேனாம். என்னைப் பைத்தியம் பிடித்த