பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



'என் தங்கமே, உனக்கு சமானம் நீதான்' 39 சமயங்களில் அவள் அந்தக் கோபத்தை மாற்றிவிடு வாள். ஆனால் சிற்சில சமயங்களில் அவளும் மன வருத்தத்தைப் பாராட்டி விட்டால் அவருடைய கோ பம் அதிகரித்து 'ஐயோ நாம் வகைமோசமாய்க் கலி யாணம் செய்து கொண்டுவிட்டோமே' என்று அவருக் குத் தோன்றும். இது அவருடைய குண விசேஷங்க ளுள் ஒன்று. ஆனால் அவர் கோபம் சீக்கிரம் அடங்கிப் போய்விடும். சற்று நேரத்திற்கெல்லாம் அவர் மனைவி தன் வருத்தத்தை மறந்து அவரிடம் வலியச் சென்று அவரைக் குளிர்ந்த வார்த்தைகளால் சந்தோஷிப்பிக் கும்பொழுது 'என் தங்கமே,உனக்கு சமானம் நீதான். இந்த உலகத்தில் என்னைப்போல் பாக்கியம் செய்தவர் கள் யார்!' என்று அவர் அவளிடம் கொஞ்சிக் கொண்டு பேசுவார். இவ்விதமாக, இந்த உலகத்தில் நன்மை தீமை எப்படிச் சமமாகக் கலந்திருக்கிறதோ அப்படியே நமது அய்யருக்கு இன்பமும் துன்பமும் கலந்திருந்தது. கமலாம்பாள் தன் ஓர்ப்படி வைத வசவை இவருடன் சொல்ல வாயெடுக்கும்போதே அவள் ஏதோ கலகம் செய்ய எத்தனிப்பதாக இவர் புத்தியில் பட்டு இவருக் குக் கோபம் உண்டாயிற்று. அப்பொழுது அந்த அம் மாள் சமயமறிந்து சந்தோஷ வார்த்தைகளால் இவர் கோபத்தை மாற்றாததால், அது இன்னும் அதிகரித் தது. அவள் அழத்தொடங்கவே அய்யர் பல்லைக் கடித் துக்கொண்டு 'ஸாகஸம் கூடவா! செய்வதெல்லாம் செய்துவிட்டு அழவும் ஆரம்பிக்கிறாய். பெரிய தெப்பக் குளங்கள் மடைதிறந்து போய்விட்டன. அழு! மூதே விக் கழுதை !' என்று மறுபடியும் கையாலடித்து அப் புறம் தள்ள, அவள் முன்னிலும் அதிகமாக அழு தாள். அது பார்த்து சுந்தரமும் பயத்தால் பதறி கயிற்றைக் கை நழுவவிட்டு தன் பெரிய தாயாரைக் கட்டிக்கொண்டு தலைகுனிந்து கடைக்கண்களால்