பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



40 கமலாம்பாள் சரித்திரம் தனது பெரியப்பாவின் கோபத்தாற் சிவந்த முகத் தைப் பார்த்து அழத்துவக்கினான். இவ்வாறு சிறிது நேரம் செல்லவே முத்துஸ்வாமி அய்யருடைய மனம் சற்றுக் கோபம் நீங்கி இளக ஆரம்பித்தது. அவர் தன் மனைவியை அணுகி ' ஏனடி அழுகிறாய்?' என்று இரண்டு தடவை அதட்டிக் கேட்டுவிட்டு அவளைத் தன்மேல் சேர்த்தணைத்துக்கொண்டு 'உன்னை யார் இப்பொழுது என்ன சொல்லிவிட்டார்கள், ஏன் அழு கிறாய்? நிஷ்காரணமாய் அழுகிறாயே, இதுதான் எனக் குக் கோபம் வருகிறது. அழாதேயடி. இன்றைக்கு இவ்வளவு போதும். நிறுத்து!' என்று அரை வெறுப் புடன் 'இவ்வளவுதான் நமக்குப் பிராப்தி' என்று தன் மனதுக்குள்ளேயே சொல்லிக்கொண்டு 'வேண் டாமடி கமலா, போதுமடி' என்று அவள் கண் களைத் தன் வஸ்திரங்களால் துடைத்தார். அவள் அழுகை ஸாகஸ மென்றே அவர் எண்ணம். ஆயி னும் அவள் அழுதது அவருக்கு ஹிம்சையாயிருந்த படியால் அவளை அவர் ஆற்றலானார். அந்த அம் மாள் 'என்ன பிழைப்பு இது. இருந்தால் நன்றா யிருக்கவேண்டும், உங்கள் பிரியம் தவறிவிட்டால் அப் புறம் எனக்கு என்ன இருக்கிறது. என் மன வருத் தத்தை உங்களிடம் சொல்லாமல் யாரிடம் சொல்லி நான் ஆற்றிக்கொள்ளுவேன். எனக்கு உங்களை விட் டால் கதி என்ன! தாயார் தகப்பனார் எல்லாரையும் விட்டு நீங்களே பிதாவுக்குப் பிதா, மாதாவுக்கு மாதா, பர்த்தாவுக்கு பர்த்தா , என்று அந்தரங்கமாய் பக்தி பாராட்டி என் வருத்தத்தைச் சொல்ல வரும்போது நீங்கள் கோபித்துக்கொள்வது எரிகிற புண்ணில் நெருப்பை வைத்தது போலிருக்கிறது. 'வருத்தப் படாதே என்று ஆற்றவேண்டியிருக்க, நீங்களே இப் படி உதறி எறிந்தால் அப்புறம் நான் என்ன செய் வேன். அவள் அப்படி வைதாள் என்றுதானே சொன் னேன். இதில் குற்றமென்ன? அது பொய் நிஜ