பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



'கமலா ! நான் பண்ணினது தப்பிதமடி' 41 மென்று கூட விசாரிக்காமல் என்னைத் தண்டிக்க ஆரம்பித்தீர்களே' என்று, விம்மி விம்மி அழ, முத்துஸ் வாமி அய்யர் மனம் உருகி 'கமலா! நான் பண்ணினது தப்பிதமடி, அதை மறந்துவிட்டி' என்று சொல்லி அவளை இறுகத்தழுவிக்கொண்டு செல்லமான சில வச வுகளை வைதும் வேடிக்கையான பேச்சுகளைச் சொல்லி யும் அவள் விசனம் மாறாதது கண்டு தானும் கண்ணீர் விட்டு அழ ஆரம்பித்தார். அவர் அழுவதைப் பார்த்து சுந்தரம் முன்னிலும் அதிகமாய் அழ, அவள் தன் அழு கையை நிறுத்திவிட்டு அவருடைய அழுகையை நிறுத்த முயற்சித்தாள். அவர் தேறி செல்லமாய் 'என் கமலா! உன்னோடு டூ-விட்டேன், என்னோடு பேச வேண்டாம்' என்று சொல்ல, அவர் மனைவி 'ஏன் என்ன கோபம்' என்று கேட்கவும் அய்யர் குதூகலத் துடன் கைகால்களை அசைத்து கொண்டு 'உன்னை யார் என்ன சொன்னார்களென்பதை நீதான் சொல்ல மாட்டேனென்றாயே, போ, போ!' என்று மிருது வான குரலுடன் சொன்னார். அதற்குள் அவள் அழுது கொண்டிருந்த சுந்தரத்தை மார்போடணைத்து 'வேண் டாம் போ எவ்வளவு பிரியம், என் கட்டி மாம்பழம்' என்று சொல்லிக்கொண்டு கண்களைத் துடைத்து 'உன் அம்மாள் உன்னை இங்கே வரக்கூடாதென்று சொல்லு கிறாளே. அவள் அப்படிச் சொல்லலாமா!' என்றாள். உடனே சுந்தரம் 'இதோ பார் நான் அவளைப்போய் அடித்துவிட்டு வந்துவிடுகிறேன்' என்று குபீரென்று கிளம்பினான். சுந்தரம் அவன் வயதுக்கு அதிக புத்தி சாலி. அவன் வெட்டினாலும் கமலாம்பாளை விட்டுப் பிரியமாட்டான். ஒரு நாளைக்கு ஒரு தடவைக்குமேல் தன் தாயாரிடம் அவள் பக்ஷணம் வைத்து வருந்தி யழைத்தாலும் அவன் போகமாட்டான். கமலாம்பாளை தன் தாயார் வைதாள் என்று கேட்ட உடனே அவன் திடீரென்று வெளியிலே கம்பும் கையுமாக ஓடினான். அவனை 'இங்கே வா, இங்கே வா' என்று கமலாம்பாள்