பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



42 கமலாம்பாள் சரித்திரம் வாசல் வரையில் பின்தொடர்ந்தாள். அவன் ஓடியே போய்விட்டான். ஏதாவது கலகம் அவனால் நேரிட் டாலும் நேரிடும் என்ற பயம் கமலாம்பாளுக்கிருந்தா லும் பொல்லாதவளாகிய பொன்னம்மாள் முகத்தில் அவளுக்கு விழிக்க இஷ்டமில்லாததால் வாசலுக்கு, அப்புறம் அவள் அவனைப் பின்தொடரவில்லை. சுந்தரம் தன் வீட்டுக்குள்ளே போனவுடன் ரவிக் கை தைத்துக்கொண்டிருந்த தன் தாயாரை 'அம்மாளை ஏனடி கைம்பெண்டாட்டி என்று வைதாய் முண்டை' என்று ஓங்கி கையில் வைத்திருந்த கம்பால் அடித் தான். அவள் அடியின் வலியினால் மூர்க்கத்தன்மை யடைந்து 'காலாந்தகா! உனக்கு அந்தச் சிறுக்கிதான் அம்மாள். நீ வீட்டைவிட்டு வெளியேறு, காலை முறித் துப்போடுகிறேன்' என்று சொல்லிக்கொண்டு ரவிக் கையைக் கீழே போட்டுவிட்டு அவனைப் பிடித்து அவன் கம்பை முறித்தெறிந்து ஒரு கயிறை எடுத்துத் தூணில் கட்டி தயிர் கடையும் மத்தால் கால் வீங்கும் படி அடித்தாள். சுந்தரம் போட்ட கூக்குரலைக் கேட்டு உள்ளே படுத்துத் தூங்கிக்கொண்டிருந்த சுப் பிரமணிய அய்யர் திடுக்கிட்டு எழுந்து ' என்னடி கொலைபாதகி' என்று வர, அந்த ராக்ஷஸி இன்றிரவு அவர்கள் வீட்டு நித்தியஸ்ராத்தத்துக்கு (நிச்சயதார்த் தம் என்பதற்கு) போனீர்களோ பாருங்கள்' 'நித்திய ஸ்ராத்தம்' என்று ஒரு பெரிய அதட்டாய்ப்போட பிராமணர், பாவம்! கைகால் நடுங்கி வாய் குழறி தூரத் தில் நின்றுகொண்டு 'குழந்தையை ஏனடி அப்படிக் கட்டினாய்' என்று கேட்டார். 'போங்கள் உங்கள் பாட் டைப் பார்த்துக்கொண்டு, கைம்பெண்டாட்டி என்று சொன்னேனாம் நான். பொய்யும் புளுகும், குழந்தை கொள்ளிக்கட்டை கையில் தடியைக் கொடுத்து 'முண்டை' என்று வைது அடித்துவிட்டு வரச்சொல்லி யிருக்கிறாளே! சாமார்த்தியச் சிறுக்கி. அவளல்லவோ