பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



'கதவை பூட்டிக் கொண்டு போடி' 45 அப்புறம் வீண் பொல்லாப்பு வரும். நீ கதவைச் சாத் திக்கொண்டு போடி' என்றார். அம்மாள், 'என்ன ஞஞ்ஞமிஞ்ஞ சும்மா இங்கேதானே கிடந்துகழி !' என்றதும் அய்யர் பல்லையிளித்துக்கொண்டு அவளைக் கெஞ்சாத வண்ணம் கெஞ்சி வெளியே கதவைப் பூட் டிப் போகச்சொன்னார். அவள் அப்பொழுதும் போ யிருக்கமாட்டாள். ஆனால் சில விசேஷ சமாசாரங் கள் வம்பர் மகா சபையில் தெரியப்படுத்தவேண்டிய தவசியமாயிருந்தது. ஆதலால் அவள் கதவைப் பூட் டிக்கொண்டு அப்படியே சபைக்குச் சென்றாள். அய் யர் கோட்டான் போல் விழித்துக்கொண்டு உள்ளே தனியாய் உட்கார்ந்திருந்தார். இது நிற்க, பெரியவீட்டுத் திண்ணையில் படுத் திருந்த கிழவர்கள் இருவரும் எழுந்திருந்து முத்துஸ் வாமி அய்யருடன் நிச்சயதார்த்தத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்தார்கள். சிறுகுளத்திலுள்ள எல்லா ஜனங்களும் முத்துஸ்வாமி அய்யர் வீட்டுக் கூடத்தில் வந்து கூடினார்கள். ஆனால் சுப்பிரமணியய் யரை மாத்திரம் காணோம். முத்துஸ்வாமி அய்யர் 'யாரடா* சுப்புளி ! சுப்பிரமணியனைப் பார்த்துக் கொண்டுவா , முட்டாள், சமயத்துக்கு எங்கேயோ போய்விடுகிறான்' என்றார். வம்பர் மகாசபைக்குப் போயிருந்த பொன்னம் மாள் அன்று நடந்த புராண முழுவதையும் சவிஸ்தார மாய் அரங்கேற்றிய பிற்பாடு சபையைவிட்டு வீட் டுக்கு வந்து தானும் தன் மைத்துனர் வீட்டிற்குப் போகாததற்கு உபாயம் செய்யவேண்டுமென்ற எண் ணத்துடன் கதவைத் திறந்து சுப்பிரமணியய்யரைக் கையைப் பிடித்துச் சரசர என்று இழுத்து ஒரு

  • (சுப்புபிள்ளை என்பது சுப்புளி என மருவிவிட்டது . அவன் பெயர் வேம்பு.)