பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



46 கமலாம்பாள் சரித்திரம் பாயின்மீது படுக்கச்செய்து நாலைந்து துப்பட்டிகளை அவர் மேலே போர்த்தி, அவரிடம் 'யாராவது கூப்பிட வருவார்கள். அப்பொழுது உமக்கு ' ஒரு தலைவலி' என்று நான் சமாதானம் சொல்லியனுப்பிவிடுகிறேன். நாமிருவரும் போகவேண்டாம்' என்றாள். சுப்பிரமணி யய்யர் நமக்கு தெய்வம்தான் பொன்னம்மாளாய் வந் திருக்கிறது என்று மகிழ்ந்து 'ததாஸ்து' என்றார். சுப்புளி வருகிற காலடி அரவம் கேட்கவே, சுப்பிர மணியய்யர் பலமாய் அலத்தத் தொடங்கினார். அவர் மனைவி அய்யர் தலையை கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டு 'பொறுத்துக்கொள்ளுங்கள். என்ன செய் வோம், படுவதெல்லாம் நாம்தானே படவேண்டும்' என்று சமாதானம் சொல்லிக்கொண்டிருந்தாள். சுப் புளி என்ற அதிசய நாமத்தையுடைய தூதன் உள்ளே வந்தபொழுது அய்யர் கோலத்தைக்கண்டு வருத்த முற்று என்ன உடம்பு?' என்று சமிக்ஞை செய்து கேட்டான். அய்யர் ஏதாவது தாறுமாறாய் உளறி விடுவார் என்று பயந்து பொன்னம்மாள் விரைவாய் இத்தனை நாழிகை வெளியிலே போய்விட்டு இப் பொழுதுதான் வந்தார் ; வந்ததுதான் தாமதம் திடீ ரென்று கீழே அலறிக்கொண்டு விழுந்தார். நான் துவையலரைத்துக்கொண்டிருந்தேன். ஓடி வந்து என்னவென்றேன். 'அப்பா! தலைவலி' என்று சொன்ன ஒரு வார்த்தைதான். ஒரு நாழிகையாய் ஓயாமல் ஒழியாமல் இந்த அலத்தல் தான். ஏன் என்று கேட்பாரைக்காணோம். நான் தனியாயிருந்து போராடுகிறேன். நிச்சயதார்த்தம் என்ன கல்யாண முகூர்த்தமா? இன்றைக்கில்லாவிட்டால் நாளை வெள் ளிக்கிழமை ஆகாதா? அதுகூட நாம் யார் சொல் வதற்கு! ஆனால் தம்பி வரவேண்டுமென்பது அவசி - யமா? நடக்கட்டும். நான் கூட வருவதற்கில்லையே என்று எனக்கிருக்கிற வருத்தம் எனக்குத் தெரியும்.