7 தமிழ்வித்வான் அம்மையப்பபிள்ளை அவர்கள். இப்பொழுது சிறுகுளத்தைவிட்டு மதுரைக்கும் போய் வருவோம். மதுரையில் நமக்குக் கொஞ்சம் காரியம் இருக்கிறது. அதைப்பார்த்துக்கொண்டு சிறு குளத்தில் நடக்கப்போகிற பெரிய கலியாணத்துக்கு மாப்பிள்ளை, சம்பந்தி முதலானவர்கள் வரும்போது அவர்களுடன் கூடவே வந்துவிடுவோம்.. நமக்கு மது ரைக்குப் போகவேண்டி பல்லக்கு, குதிரை இவை ஒன் றும் தேவையில்லை. முற்காலத்து ரிஷிகளிடத்தில் 'கமன குளிகை' என்று ஒரு அருமையான வஸ்து இருந்ததாம். அதில் ஒன்று எடுத்து வாயில் போட்டுக் கொண்டால் எந்த இடத்துக்கு வேண்டுமோ அந்த இடத்திற்குக் கொண்டுபோய் விடுமாம். நமக்கு அம் மாதிரி குளிகைகளின் உதவிகூடத் தேவையில்லை. நினைப்பின் மாத்திரத்தில் இடம் விட்டு இடம் போக சாமர்த்தியமுண்டல்லவா? மதுரையில் 'ஜில்லா ஸ்கூல்' என்று பெயர் வழங் கிய கவர்ன்மெண்டு காலேஜ் என்ற பள்ளிக்கூடத் தின் தாழ்வாரத்தில் ஒரு மூலையில் சில பென்சிகளும் அவற்றின் மத்தியில் ஒரு நாற்காலியும் மேஜையும் போடப்பட்டிருந்தன. அந்த மேஜையின்மேல் சில மைக்கூடுகள் இருந்தன. 'டிங்டாங்' என்று பத்தா வது மணி அடித்தவுடன் அவ்விடத்தில் சுமார் இரு பது பையன்கள் வந்து கூடினார்கள். அவர்கள் வந்து ஐந்து நிமிஷத்திற்குள் அம்மைத் தழும்புகள் நிறைந்த முகத்தையும் நீண்ட கறுத்த உருவத்தையுமுடைய