பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



50 கமலாம்பாள் சரித்திரம் வும் அவர் பாட ஆரம்பித்தால் அவருக்கு சரியாக மகா வைத்தியநாதைய்யர்கூடப் பாட முடியாது. ஒருநாள் மதுரை கட்டைசெட்டி மண்டபத்தில் நமது புலவர் கம்பராமாயணத்தில் சீதாகல்யாணப் படலத்தை எடுத்துப் பிரசங்கம் செய்து கொண்டிருந்தார். அப் பொழுது தற்செயலாய் தெருவழியே போன ராம பக் தன் ஒருவன் ராமன் என்ற பேரைக் கேட்டுவிட்டு, ராமகதை போலிருக்கிறது கேட்போம், என்று உள்ளே வந்தான். அப்பொழுது அம்மையப்பபிள்ளை வாயினின்றும் எச்சில் காத வழிக்குத் தெரிக்க கண் கள் சிவந்து வெகு உக்கிரமான முகத்துடனும் கடூர மான குரலுடனும் அதிக உற்சாகமாய்ப் பிரசங்கம் செய்ய, வந்த ராமபக்தன் 'ராம- ராவணயுத்தம் போ லிருக்கிறது, அதுதான் இவர் இவ்வளவு கோபாவேச மாயிருக்கிறார். நல்ல பக்தர்போலும்' என்று இவரை மனதுக்குள் கொண்டாடிக் கொண்டிருக்கும்போதே புலவர் ' ராமன் சீதையைக் கல்யாணம் பண்ணிக் கொண்டான். சீதையைக் கல்யாணம் பண்ணிக் கொண்டான் ராமன் ' என்று கைகளை வீசிக்கொண்டு கர்ச்சித்தார். அதைக்கேட்டு அந்த ராம பக்தன் திடுக் கிட்டு எழுந்து கண்களில் தீப்பொறிபறக்க 'ராமன் அப்படித்தான் சீதையைக் கலியாணம் செய்து கொள் வான். அதற்கு நீர் என்ன ஓய் கோபிக்கிறது!' என்று அதட்டிக்கொண்டு அவரை ஓங்கி அடிக்கச் செல்லவே சுற்றியிருந்தவர்கள் அந்த ராமபக்தனைக் கைபிடித் திழுக்க, அவன் விடுங்கள், சீதையை மணம் செய்த தற்கு இவ்வளவு கோபம் கோபிக்கிற சண்டாளனைக் கொல்லுகிறேன்' என்று சொல்ல, 'அது கோபமல்ல , உள்ள சாந்தமே அவ்வளவுதான் அவருக்கு என்று சொல்லி அவனைச் சமாதானப்படுத்தினார்கள். பிள்ளை அவர்களோ நடுநடுங்கி பாதிக்கலியாணத்தில் நிறுத்தி விட்டு 'ராமன்பாடு, சீதைபாடு, அவர்கள் விஷயத் திற்கு நான் வரவில்லை. போதும் போதும்' என்று