பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



தமிழ் வித்வான்கள் தர்க்கம் 51) - - - - -- - அன்று முதல் பொது ஸ்தலங்களில் கதாப்பிரசங்கம் செய்வதை நிறுத்திவிட்டார். இவ்விதம் சங்கீத -ஞானம், சாரீர சம்பத்து, தமிழ் வித்வத்துவம் இவை களில் இவர் சிறந்தவரா யிருந்தது மன்றி நல்ல புத்தி 'மானாயும் இருந்தார். ஒரு காலத்தில் அவருக்கும் அம்மாபட்டிக் கவண்டயன் கோட்டைக் கவிராயருக்கும் 'அன்னநடை என்று நடைக்கு விசேஷமாகக் கூறும் அன்னப்பட்சி உலகத்தில் தற்காலத்தில் உண்டா ? - இருக்குமா னால் அது எது?' என்ற பெரிய விஷயத்தைப்பற்றி யுத்தம் நடந்தது. கவிராயர் அன்னம் என்பது காக்கையாயிருக்கவேண்டும். ஏனெனில் காக்கை யொன்றே பட்சிகளுக்குள் நடையிற் சிறந்ததாயிருக் கிறது; ஆன துபற்றிக் காக்கையே அனனப் புள்ளாதல் வேண்டும்' என்று அதற்கு ஆதாரங்கள் காட்டிச் சாதித்தார். அம்மையப்பபிள்ளை 'அல்ல, அல்ல. அன் னம் என்றால் சாதம். அன்னமும் வெள்ளை, சாதமும் வெள்ளை, சாதத்திற்கே அன்னமெனப் பெயருண்டு. மேலும் அன்னமும் பட்சி; சாதத்தையும் நாம் பட்சிக் கிறோம் (சாப்பிடுகிறோம்). ஆதலால் சாதத்தையே அன்னமென்று. - தட்டுபவனைத் தட்டான் என்று சொல்லியதுபோல் - உருவக நவிர்ச்சியலங்காரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது' என்று அதற்குப் பிரமாத மாய் ஆயிரம்பாட்டுகளை யெடுத்து ஆதாரம் காட்டி சண்டப்பிரசண்டமாய் ஆட்சேபித்தார். முதலில் இந்த யுத்தம் கடிதமூலமாகவே நடந்தது. பிறகு இரண்டு வித்வான்களும் நேரிலே மதுரையிலேயே சந்தித்து பத்து நாள் இரவும் பகலும் அண்டைவீட்டுக்காரரைத் தூங்க விடாமல் யுத்தம் பண்ணினார்கள். கடைசியில் ஒருநாள் ராத்திரி அம்மையப்பபிள்ளை கவண்டயன் கோட்டைக் கவிராயரை, அன்னத்தைக் காக்கை யென்று சொன்னதற்காக 'காக்கை' யென்று பரி