சிரிக்காதேயுங்கள், ஹெட்மாஸ்டர் வந்துவிடப் போகிறார் ! 53 யென்ற ஒரு பையன் உண்டு. அவன் வெகு வேடிக் கையாய்ப் பேசுவதால் அவனைத் 'தென்னாலிராமன்' என்று பையன்கள் கூப்பிடுவது வழக்கம். அந்தத் தென்னாலிராமன் வாத்தியார் குறிப்பை யறிந்து சுவாமி, இன்னொருதரம் படிக்கவேணும், கேட்கக் கேட்க இன்பமாயிருக்கிறது. புஸ்தகமோ நள வெண்பா, படிப்பதோ இன்னாரென்று சொல்ல வேண்டாம்' என, உபாத்தியாயர் உள்ளங்குளிர்ந்தவ ராய் படிக்கிறது யார்? ஆடுசாபட்டி அம்மையப்ப பிள்ளை என்று சொல்லேன்'. பையன் 'சுவாமி, தாங் கள் பேர் முழுவதும் நன்றாய்ச் சொல்லவேண்டும்' என் றதும் குரு 'என் பெயரா, சொல்லுகிறேன் கேள் : கடல்சூழ்ந்த இந்நிலவலயத்திற்கு ஓர் திலகம் போன்ற ஆடுசாபட்டி மகாவித்வான் . அம்மையப்ப பிள்ளை' என்றார். தென்னாலிராமன் (மெதுவாய்) * ஒரு வண்டி காணாதுபோல் இருக்கிறதே' என்று சொல்லிவிட்டு, ' சுவாமி, முன்போல முழுவதும் சொல்லவில்லையே' என்றான். வாத்தியார் 'நாழிகையா கிறது, மேலே சொல்வோம்' என, பையன் முழுவதும் சொன்னால் தான்' என்றான். உடனே வாத்தியார், 'கடல் சூழ்ந்த இந்நிலவலயத்திற்கு ஓர் திலகம் போன்ற ஆடுசாபட்டியில் அவதரித்த அண்டர் புகழும் அஷ்டா வதானம் அருந்தமிழ்ப் புலவர் மகா வித்வான் அம்மை யப்பபிள்ளை அவர்கள். இப்பொழுது சரிதானா!' என் றதும் எல்லாரும் கொல்லென்று சிரித்தார்கள். வாத் தியார் வாயில் கை பொத்திக்கொண்டு 'சிரிக்காதேயுங் கள், ஹெட்மாஸ்டர் வந்துவிடப் போகிறார்,' என்று சொல்லிவிட்டு, மறுபடி பாட்டைப்படித்து மாவிந்த நகரத்தில் ஸ்திரீகள் மார்பிலணிந்த சந்தனமானது அவர்கள் ஸ்நானம் செய்யும்பொழுது சேறாகித் தெரு வெல்லாம் நிறைந்திருப்பதால் அந்நகரத்து வீதிகளில் செல்லும் யானைகள் அச்சேற்றில் வழுக்கி விழுகின் மன. அவ்வளவு சந்தனம், அவ்வளவு சேறு, பேஷான