54 கமலாம்பாள் சரித்திரம் பாட்டு, ஆஹா!' என்று பிரசங்கித்துவிட்டு மறுபடி யும் அந்தப் பாட்டைப் படிக்கப்போனார். அப்பொ ழுது தென்னாலிராமன் எழுந்து சுவாமிகளே ஒரு சந் தேகம், அந்த ஊரில் யானைகளே அந்தப்பாடுபட்டால், மனிதர்கள் நடப்பதெப்படி?' என்றான். வாத்தியார் :--'அந்த ஊரில் மனிதர்கள் நடப்பார் களோ! பல்லக்கு சவாரி செய்வார்கள். இந்த தரித் திரப் பட்டணங்களைப்போலவா?' தென்னாலி ராமன். - 'சுவாமி, எல்லாரும் பல்லக் கேறினால் சுமக்கிறவர்கள் யார்? சுமக்கிறவர்கள் என்னமாய் நடப்பார்கள்?' வாத்தியார். - ' பல்லக்கு என்றால் பல்லக்கா? சாரட்டுகளில் சவாரி செய்வார்கள்..! -- - தென்னாலி ராமன். -- 'அப்படியானால், குதிரைகள் வழுக்கி விழாதோ?' வாத்தியார். - இப்படி யெல்லாம் கேட்டால் சரிப் படுமா? பாட்டில் மூன்று சங்கதிகள் சொல்லியிருக் கிறார். புகழேந்தியின் சாமர்த்தியமே சாமர்த்தியம். என்ன? அவ்வூரில் சந்தனம் ஏராளமாய்ப் பூசிக் கொள்ளுகிறார்கள். அது தெருவெல்லாம் சேறாகிறது, மூன்றாவது அந்த ஊரில் யானைகள் உண்டு.' இன்னொருபையன் எழுந்து 'சுவாமி, இன்னும் இரண்டு சங்கதிகள் விட்டுவிட்டீர்கள். அந்த ஊரிலே கூட ஸ்திரீகள் உண்டு, இரண்டாவது அவர்கள் கூட ஸ்நானம் செய்வது உண்டு' என்றான். வாத்தியார் 'கலிகாலக்கப் பிள்ளைகள் மகா அதிகப்பிரசங்கிகள்' என்றார். என்னாலிராமன் 'யார் சுவாமி அதிகப்பிர சங்கி? டே சுமிஞ்சுகிறாற் போல இருக்கிறது!' எனவே,