பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



' அங்கே பண்ணினதுபோல் பண்ணிவிடட்டுமா?' 57 போயிருந்தீர்? என்று கேட்டால், "தூங்கிப் போய் விட்டேன் என்று சொல்லுவாரோ , சொன்னால் அப் ராதம் நிச்சயம்' என்றான். வாத்தியார் ஒன்றும் செய் யத்தோன்றாமல் திரும்பத் தன்னிடம் வந்து ' நாளை முதல் இப்படிச் செய்யுங்கள் சொல்லுகிறேன் வழி' எனவும், சுப்புக்குட்டி என்ற பையன் ' நாளையும் செய் தால் இன்றைக்குப் பண்ணின மாதிரி பண்ணிவிடுவீர் களோ!' என்றான். - ஒரு பிராமணன் ஒருவர் வீட் டுக்குப் போய் எனக்கு சாதம் போடுகிறீர்களா அல்லது நேற்று அங்கே பண்ணினதுபோல் பண்ணிவிடட் டுமா?' என்றாராம். வீட்டுக்காரன் மனைவி பயந்து - அப்படியெல்லாம் ஒன்றும் செய்துவிடாதேயும்; நாங்கள் இருக்கிறோம் தெய்வமே என்று, சாதம் போடுகிறேன் சாப்பிட்டுப்போம்' என்று உள்ளே அழைத்துப்போய் சாதம் போட்டாள். வெளியில் வந்தபிறகு ' நேற்று என்ன பண்ணினீர் சொல்லும்' என்று கேட்க, அந்தப்பிராமணர் 'சொல்லிவிடட்டுமா!' என அம்மாள் ' சாப்பிட்டாய் விட்டதல்லவோ, சும்மா சொல்லுங்கள்' என்றாள். பிராமணர் ' நான் சொல்லியே விடுவேன்' என்று மறுபடியும் பயமுறுத்தினார். அம் மாள் ' சொல்லுங்கள் ' என்று கேட்க, ' நேற்றைக்கா, இந்த இடதுகையிருக்கிறதல்லவோ அதை ஒரேயடி. பயாய் தலைக்குயரம் வைத்துக்கொண்டு பட்டினியாகவே படுத்துகொண்டு விட்டேன்' என்றார். - என்று ஒரு கதை யுண்டு. அதுபோல் வாத்தியார் கொஞ்சம் பய முறுத்திப் பார்த்தார். பலிக்கவில்லை. ராமசுப்பன் என்ற பையன் 'இல்லை இல்லை. நாளை இப்படிப் பண்ணினால் அழுதுவிடுவார்' என்றான். தென்னாலி ராமன் ' சூ சூ சும்மா இரடா, அவரை இப்பொழுதே அழவைத்து விடுவீர்கள் போலிருக்கிறதே. நாளை அழுகிறதாம்! நாளை முதல் பள்ளிக்கூடத்தில் தூங் கினால் தானே! அவன் கிடக்கிறான் ஸார், நீங்கள் நாளை முதல் தூங்காதேயுங்கள் ஸார்' என்று சொல்லிக்