பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதல் பதிப்பின் முன்னுரை. விவேகசிந்தாமணி' பிரசுரங்களில் ஒன்றான கம லாம்பாள் சரித்திரம் பற்றி நாம் சொல்லப்புகுமுன், இந் நூலைப்பற்றி இதன் ஆசிரியர் என்ன அபிப்ராயம் கொண் டிருக்கிறார் என்பதை தெரிவிக்கவேண்டியது அவசியம். - "இவ்வுலகில் உழன்று தவிக்கும் ஒரு அமைதியற்ற ஆத்மா, பல கஷ்ட நஷ்டங்களை அனுபவித்து கடைசியாக நிர்மல மான ஒரு இன்ப நிலை அடைந்ததை விவரிப்பதே இந்த நவீ னத்தின் முக்கிய நோக்கம்" என்று ஆசிரியர் தன் சொந்த மொழிகளில் குறிப்பிடுகிறார். பேனா இங்கி இவைகளின் சேர்க்கையாலும், ஆசிரியரின் கற்பனையாலும் பிறந்த இந்நவீனம், ஒரு ஹிந்துக் குடும்பத்தை சித்தரித்திருப் பதைப்போல வேறெந்த நவீனமும் சித்தரிக்கவில்லை என்று கூறிவிடலாம். நம் நாட்டு ஸ்திரீகளின் பெருமைகளும் சிறுமைகளும் இப்புத்தகத்தில் வெகு அழகாக தீட்டப்பட் டிருக்கின்றன. "கடவுள் எல்லாவற்றிற்கும் அந்தம். எல்லாம் கடை சியில் அவனையே அடைகின்றன. என்ன நேர்ந்தாலும் அவைகள் எல்லாம் நமது நன்மைக்கே என்பதையும், நாம் அனுபவிக்கும் தண்டனைகள் கடைசியாக நமக்கு நன்மை யாகவே முடியுமென்பதையும் உணர்ந்துக்கொண்டு கர்மா வில் ஈடுபடுவது அவனை அடையும்படியான சுருக்குவழி " என்பதே இக்கதை நமக்களிக்கும் படிப்பினையாகும். கவியரசர் கம்பனின் புகழையும் அவருடைய காவியத் தின் நயத்தையும் எல்லோரும் அறியும்படி செய்வதில் இந்