பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



அழகுள்ள நல்ல பிள்ளை 59 --- படுத்தும் தன்மையனவாயிருந்தன. அவனுடன் படிக் கும் கொட்டை முத்து ராமையா என்ற பையன் அவனை 'லேடி' (ஏ பெண்ணே ) என்று கூப்பிடுவான். நொண்டி. சுப்பய்யா அவனை என் கண்மணியே' என் பான். பெருந்தீனிவைத்தி அவனை 'மாம்பழம்' என்று கூப்பிடுவான். தமிழில் கொஞ்சம் தேர்ச்சியடைந்த முத்துசாமி என்பவன் அவனைக்காணும் போதெல் லாம் அய்யோ இவன் வடிவென்பதோரழியா அழ குடையான் ' என்றும், "காவியுங் குவளையுங் கடிகொள்கா யாவு மொத் தோவியஞ் சுவைகெடப் பொலிவதோ குருவொடே தேவருந் தொழுகழற் சிறுவன் முன் பிரிவதோர் ஆவிவந் தென்னவந் தரசன் மா டணுகினான் என்றும், பாடத்தொடங்கிவிடுவான். தென்னாலி ராமன் அவனைக் காணுந்தோறும் ' என் பொன்னம் மங்காள், என் தங்கமே' என அழைப்பதுமன்றி வாத்தியார் வரச் சற்றுத் தாமதப் பட்டால் ஸ்ரீநிவா சனைப்பார்த்து 'முங்கி முழுகுகிற பெண்ணே ' என்றிப் படித் தாளம் போட்டுக்கொண்டு கீர்த்தனை பாட ஆரம்பித்துவிடுவான். இங்கிலீஷ் வாத்தியார் நித்தி யானந்தப் பிள்ளைக்கு அந்தப் பள்ளிக்கூடத்திலேயே அவன் ஒருவனைத்தான் தெரியும். 'ஹெட்மாஸ்டர்' திருமலாச்சாரியார் பாடம் நடத்தும்போது அவன் ஒரு வனைத்தான் பார்த்து நடத்துவார். கடு கடு என்று கடுவன் பூனைக்கு நிகராய் கோபிப்பதையே தொழி லாய் உடைய சம்ஸ்கிருத வாத்தியார் அப்பாசாஸ் திரிகள் கூட இவன் தமிழ் படிப்பவனாயிருந்தாலும் இவனைக்கண்டு ஒருநாளைக்கு ஒரு தடவையாவது பேசாமல் வீட்டுக்குப் போகமாட்டார். புருஷலட்ச ணத்தில் தனக்கு மிஞ்சினவன் இல்லையென்று கர்வித்த சேஷாசலத்துக்கு மட்டும் இவனிடத்து பொறாமை யிருந்தாலும் 'சேஷ நடையே நடை, அவனுடன்