பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



அன்று முதல் அத்யந்த சினேகிதர்கள் 61. நாயோ கழுத்தைத் தொங்கப் போட்டுக்கொண்டு ஒரே ஓட்டமாய் ' உயிர் தப்பியது தம்பிரான் புண் ணியம் ' என்று ஓடிவிட்டது. ஸ்ரீநிவாசன் கீழே இறங் கிக்கொண்டு சுப்பராயனுடைய கைகளால் தன் கண்ணைப் பொத்திக்கொண்டு கண்ணீர் பெருக்கினான். சுப்பராயன் அவனைப் 'பயப்படாதே' என்று தட்டிக் கொடுத்து அவன் புஸ்தகங்களையும் தான் வாங்கிக் கொண்டு நாய்மேல் எறிந்ததால் உடைந்துபோன தன் சிலேட்டையும் எடுத்துக்கொண்டு அவனையும் தன் வீட்டிற்கு அழைத்துக்கொண்டு போய் கூழ்மோர் காய்ச்சிக்கொடுத்து அவனுடைய அகத்துக்குக் கூட் டிக்கொண்டு வந்து விட்டுவிட்டு அவன் தாயார், பாட் டியார் முதலியவர்களுடைய ஆசீர்வாதங்களுடனும் ஸ்ரீநிவாசன் வந்தனங்களுடனும் வீட்டிற்குச் சென் றான். அன்றுமுதல் அவ்விருவரும் அத்தியந்த சினே கிதர்கள். அவர்களுக்குள் ஒருவர்க்கொருவர் சொல் லாத ரகசியமே கிடையாது. அவர்கள் சேர்ந்துதான் படிப்பு, சேர்ந்து தான் படுக்கை. சுப்பராயனகத்தில் மாடியில் ஒரு அறை இவர்களுடைய ஆதீனம். சில நாள் ஸ்ரீநிவாசன் தன் வீட்டிற்கு வராமலே கூட இருந்துவிடுவான். அவனை ஒருவரும் பரிகாசம்கூட செய்யக்கூடாது, சுப்பராயன் சண்டைக்கு வந்துவிடு வான். அவன் அழகுக்கு எங்கே திருஷ்டி வந்துவிடப் போகிறதோ என்ற பயத்தால் அவன் அழகைக்கண்டு யாராவது புகழ்வதைக் கண்டால் சுப்பராயன் 'ஆ வெகு அழகு ! ஒடிந்து விழுகிறாற்போல் இருக்கிறான். ஆயிரக்கலநோய். சிவப்புத் தோல் தான் சமயநல்லூர் புளிப்பு மாம்பழம் போல்' என்று சொல்லுவான். கலி யாணப் பிரஸ்தாபம் வந்தது முதல் அன்றன்று நடக் கிற சமாசாரத்தை ஸ்ரீநிவாசன் சுப்பராயனுக்குச் சொல்லிவிட்டுத்தான் மறுகாரியம் பார்ப்பான். அம் மையப்பிள்ளைக்கு அல்லாபண்டிகை வேஷம் போட்ட