பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



64| கமலாம்பாள் சரித்திரம் வெகு அருமையாய்ப் பாட்டும் படிப்பும் சொல்லிக் கொடுத்திருக்கிறார்களாம். கம்பராமாயணம் தலை கீழாகத் தெரியுமாம்.' சுப்பராயன். - ' கம்பராமாயணமா ! அவள் சிறு பெண். எனக்கு எருமைக்கிடாபோல் இருபது வய தாய்விட்டது. நான் இன்னும் அதில் ஒரு பாட்டுக் கூட அறியேன் நீ சொன்னதைத் தவிர.' ஸ்ரீநிவாசன். -' பெண் மின்னல் கொடிபோல இருக்கிறாளாம். அதிக லட்சணமாம். அவள் நடை யும், பார்வையும், சாயலும் இப்பொழுதே வெகு அழகாயிருக்கிறதாம்.' சுப்பராயன். - ' நிரம்ப சரியாகப்போய்விட்டது.' -ஸ்ரீநிவாசன்.. அவளுக்கு பந்துக்கள் சிலர் பெரிய பெரிய உத்தியோகங்களிலிருக்கிறார்களாம். முத்துஸ் வாமி அய்யருடைய பெரிய தகப்பனார் பிள்ளையோ என்னவோ மஞ்சக்குப்பத்தில் டிப்டி கலெக்டர் உத்தி யோகம் பண்ணுகிறாராம்.' சுப்பராயன்.-' மஞ்சக்குப்பமா! நாராயணசாமி அய்யரோ? அடடா அப்படிச் சொல்லு. சரிதான். உன் அகமுடையாளை நான் பார்த்திருக்கிறேன். என்ன மாக என்று கேள். போன வருஷம் என் தகப்பனார் அங்கே தாசீலாக இருந்தாரல்லவோ? அப்பொழுது நாராயணசாமி அய்யருடைய வீட்டிலே அவர் பெண் ணுக்குக் கலியாணம். அங்கே ஒரு சிறுபெண் தம்பூர் வைத்துப் பாடினாள். எல்லாரையும் ஆனந்த பரவச மாக்கிவிட்டாள்.. அடடா பேஷ்! பேஷ்! அப்படியா ஸ்ரீநிவாசா - உன்னைப்போல் பாக்கியசாலி கிடையாது. உனக்கேற்றவள் அந்தப் பெண்ணே ; அவளுக்கேற்ற வள் நீயே' என்று சொல்லிக்கொண்டு சந்தோஷத்தால் அவன் முதுகில் தட்டினான்.