கல்யாணத்திற்கு முகூர்த்தம் வைத்திருக்கிறது 65 அதற்குள் அம்மையப்ப பிள்ளையவர்களுடைய திருக்கூத்து நடந்து எல்லாரும் இடி இடி என்று சிரித்த இரைச்சல் கேட்டு இருவரும் ஓடிவர அம்மை யப்ப பிள்ளையவர்கள் செம்புள்ளி கரும்புள்ளி குத்திக் கொண்டு நின்றதைக் கண்டார்கள். உடனே ஸ்ரீநி வாசன் அவர் நிலைமையைக் கண்டு பரிதபித்து தன் சட்டையுள் ஒன்றைக் கழற்றி அவருக்குக் கொடுத்து தன் கைக்குட்டையால் அவர் முகத்தைத் துடைத் தான். வாத்தியார் இவன் செய்த உபகாரத்துக்காக கண்களில் நீர் ததும்ப இவனுக்கு வந்தனமளித்து ' நீ சீக்கிரம் நல்ல பெண்ணைக் கலியாணம் செய்து கொண்டு நெடுங்காலம் சுகமாக வாழ்ந்திருப்பாய்' என்று மனப் பூர்வமாய் ஆசீர்வதிக்க, அருகிலிருந்த சுப்பராயன், ' கலியாணத்திற்கு முகூர்த்தம் வைத் திருக்கிறது' என்று சொன்னான். வாத்தியார் ஸ்ரீநி வாசன் கையைப் பிடித்துக்கொண்டு 'எனக்கு நீ இந்த சங்கதியைச் சொல்ல வேண்டாமா? எங்கே, எப் பொழுது கலியாணம்?' என்றிப்படி விசாரித்ததில் 'சிறுகுளம் முத்துஸ்வாமி அய்யர்' எனவும், அவருக்கு வந்த சந்தோஷத்திற்களவில்லை. 'என் தாதா முத்துஸ் வாமி அய்யரா! அடடா அவர் முதல் வள்ளல் அன்றோ ! நான் அவருடைய அடிமையல்லவோ! அந்த மகான் பெண்ணா? உனக்கா நிச்சயமாயிருக்கிறது? உனக்கு கடவுள் கிருபை பூர்த்தியாய் இருக்கிறது. எனக்கும் கடிதம் வரும். நானும் வருகிறேன் உன் திருக்கல்யா ணத்திற்கு' என்றார். அம்மையப்பபிள்ளை மொத்தத் திற்கு வெகு நல்லவர். அவர் குணாகுணங்கள் பின்னால் வெளிப்படும். அவர் இந்த சரித்திரத்தில் சம்பந்தப்பட் டவர். ஸ்ரீநிவாசனிடம் அவர் பேசிக்கொண்டிருக்கும் போதே மணியடித்து விட்டது. ஸ்ரீநிவாசன் 'மறு கிளாசு'க்குப் போய்விட்டான். மறுநாளிரவு ஸ்ரீநிவாசன் சுப்பராயனகத்துக்குப்