பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



66 கமலாம்பாள் சரித்திரம் போனபொழுது விசேஷ சங்கதி ஒன்று அவனுக்குச் சொல்ல ஆவல் கொண்டவனாயிருந்தான். ஆனால் சுப்ப ராயன் அவன் தகப்பனார் முதலானவர்களுடன் சாப் பிட்டுக்கொண்டிருந்தான். ஸ்ரீநிவாசன் அவன் வரவை எதிர்பார்த்துக்கொண்டு மாடியில் உலாத்தத் தொடங் கினான். கல்யாண ஞாபகம் தவிர அவனுக்கு வேறு ஞாபகமே கிடையாது. உலாத்திக்கொண்டே மெது வாய்ப் பாடி, சற்று நேரம் பாடிவிட்டு அடியில் வரு கிறபடி தனக்குள்ளேயே பேசிக்கொண்டான்:- 'என் மேலென்ன அவளுக்கு அவ்வளவு பிரியம்? அழகா யிருக்கிறேன் என்றா? அதற்கு என்னைப் பார்த்தது கூட இல்லையே. நன்றாய் வாசிக்கிறேனென்றா. நமக் கென்னடா குறைவு. அப்பா உத்தியோகம் பண்ணு கிறார். இரண்டு தாத்தாவும் இருக்கிறார்கள். என்மேல் காற்றடிக்க சகிக்கமாட்டார்கள். இதைக்காட்டிலும் பாக்கியம் வேறென்ன இருக்கிறது. (கண்களில் நீர் ததும்ப) அவர்கள் அன்பே நமக்குப் பெருஞ்செல்வம். படிப்பு, அழகு, செல்வம் எல்லாம் இருக்கிறது; என்ன குறைவு ! எல்லாவகுப்பிலும் நான்தானே முதல் . - சரி வந்துவிட்டதா கர்வம், நமக்குச் சமானம் யார் இருக் கிறார்கள் என்று! கழுதைக்கானது போல் வயது 14 ஆய்விட்டது; இன்னும் மெட்றிகுலேஷன் தேறவில்லை. அதற்குள் தலைகால் தெரியவில்லை' என்றிப்படித் தன் னையே புகழ்ந்துகொண்டும் கண்டித்துக்கொண்டும், சிறிது பேசிவிட்டுப் பிறகு 'கல்யாணத்திற்கு சமா னமா? வேஷ்டியை பஞ்சகச்சம்வைத்துக் கட்டிக் கொண்டு, சந்தனம் பூசிக்கொண்டு, வெற்றிலை போட் டுக்கொண்டு 'ஜம்' என்று , - சுவாமீ! இந்தக் கல்யா ணம் மட்டும் குறைவில்லாமல் நடத்திக் கொடுக்க வேண்டும்! மீனாட்சி! ஐந்து தேங்காய் வாங்கி உடைக் கிறேன். இன்னும் பத்து நாளிருக்கிறது. பத்து நாளா வது ஒன்பகட நாள்தான். இன்றைப்போதுதான்