பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



viii நூலும் சிறிது உதவியாக இருக்கிறது. கம்பனுடைய பாடல்களில் சில இப்புத்தகத்தில் ஆங்காங்கே கையாளப் பட்டிருக்கின்றன. உயர்ந்த கருத்துகளையும், மனதில் உதிக்கும் பற்பல எழுச்சிகளையும், உணர்ச்சிகளையும் தெள்ளிய தமிழ்மூலம் வெளிப்படுத்துவது சாத்தியமாகும் என்பதற்கு இந்நூல் ஒரு சான்றாகும். அக்டோபர், 1896. ஸி. வி. ஸ்வாமிநாதையர். இரண்டாம் பதிப்பின் முன்னுரை. இந்நூலின் இரண்டாம் பதிப்பு வெளிவரும் சமயம் ஆசிரியர் இப்பொய்யுடல் நீத்த செய்தியை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்ளுகிறேன். ஆனால் அவர் ஆத்மாவுக்கு அழிவில்லை என்பது மட்டும் நிச்சயம். அவர் எந்த நோக் கத்தைக் குறித்து இதுகாறும் சேவை செய்து வந்தாரோ அந்நோக்கம் ஈடேற விவேகசிந்தாமணி பின் வாங்கப் போவதில்லை. அவர் 'நித்யானந்த நிலை'யை அடைந்து விட்டார். அவருடை சிருஷ்டியான கமலாம்பாள் தமிழுல கில் ஒரு புரட்சியை உண்டு பண்ணிவிட்டது. இந்நூலில் எவ்வித மாறுதல்களையும் புகுத்தாமல் ஒவ்வொரு அத்யாயத்திற்கும் தலைப்புகள் அமைத்திருப் பதே இந்த இரண்டாவது பதிப்பில் செய்த புதிய வேலை யாகும். ஆனந்தாஸ்ரமம், ) திருவல்லிக்கேணி, பிப்ர வரி, 1904. ) ஸி. வி. எஸ்.