பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



கல்லுளியும் குப்பிப் பாட்டியும். முத்துஸ்வாமி அய்யர் பெரிய பணக்காரர் என்று நாம் முன்னமே பலமுறை சொல்லியிருக்கிறோம். பாகம் செய்துகொள்ளும் காலத்தில் அவருக்கு ஐம்பதி னாயிரம் ரூபாய் ஆஸ்தியிருந்தது. சில பெரிய வியா பாரங்களில் அவர் இறங்கி அவைகளை செவ்வையாக நடத்திவந்தபடியால் சிலவருஷங்களுக்குள் அவர் லக்ஷத்து ஐம்பதினாயிரம் ரூபாய் ஆஸ்திக்கு அதிபதி யானார். ஆகையால் அந்தப் பக்கங்களுக்கு அவர் பெரிய பணக்காரரென்று பிரசித்தி பெற்றிருந்தார். அதுவும் தவிர நல்ல கொடையாளி என்றும், அனேக விஷயங்களில் அதிக தேர்ச்சி பெற்றவரென்றும், நல்ல புத்திமான் என்றும் அவர் பெயர் எங்கும் பிரபலமா வித்துவான்கள் இந்த ராஜதானியிலேயே கிடையாது. சிறுகுளத்தைச் சுற்றியுள்ள எல்லாக் கிராமங்களிலும் பொழுது விடிந்தது முதல் அரவம் ஒடுங்கும் வரை முத்துஸ்வாமி அய்யர் வீட்டுக் கலியாணப் பேச்சைத் தவிர வேறு பேச்சுக் கிடையாது. மேலைப்பாளையம் என்ற கிராமத்தில் ராமஸ்வாமி அய்யர் என்ற ஒரு பிராமணர் சாப்பிட்டுவிட்டு வெற்றிலை போட்டுக் கொண்டு திண்ணையில் உட்கார்ந்தார். அப்பொழுது சாப்பிட்டுவிட்டு வெற்றிலையைக் கையிலெடுத்துக் கொண்டு யார் வீட்டுத் திண்ணையில் பேச ஆளிருக் கிறார்கள் என்று பார்த்துக்கொண்டு தன்மேல் வேஷ் டியை கீழே போட்டுக் கொள்வதற்காக சித்தமாய் கையில் எடுத்துக்கொண்டு அப்பய்ய தீட்சதர் என்ப வர் வந்தார். ராமஸ்வாமி அய்யர் அவரைக் கண்டதும்