பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



- 76 கமலாம்பாள் சரித்திரம் எச்சரிகை கொடுத்ததையும், கள்ள ஊராகிய நகரி என்ற கிராமம் சமீபிக்கவே, ஓரிருண்ட தோப்பின் வழி போகும் போது வெளிச்சங்களையெல்லாம் மறைத்துக்கொண்டு குழந்தைகள் வாயை முதல் பொத்திக்கொண்டு 'பேசாதே, பேசாதே' என்று மெது வாய் எல்லாரும் பேசியதையும், மரத்துக்கு மரம் கள்ளனிருப்பதாக பயந்து வண்டிக்காரர்கள் கூட.. மாட்டை இரைந்து அதட்டாமல் வண்டியை வேக மாய் விட்டதையும், அவ்வூர் தாண்டிய உடனே 'ஜோ' என்று மழை பெய்ததுபோல் எல்லாரும் இரைந்து பேசியதையும், வனதேவதைகள் கோவில் தோறும் எல்லோரும் இறங்கி சேவித்துச் சென்ற தையும், மறுநாள் ஒரு பெரிய சோலையில் தங்கி சாப் பாடு செய்ததையும், அங்கே ஆகாயமட்டு மளாவிய மரங்களைக்கண்டு ஸ்ரீநிவாசன் ஆச்சரியமடைந்து அவற்றின் கீழ் ஓடும் நதியில் அவைகளின் இருண்ட நிழல்களைக் கண்டு மயிர்க்கூச்செரிந்து ' இவைகளில் குரங்குகளைப்போல ஏறிப் பாய்ந்து ஓடி. சஞ்சரிக்க வேணுமென்று ஆசையாக இருக்கிறது' என்று சுப்ப ராயனிடம் சொன்னதையும், பிறகு எல்லோரும் புறப் பட்டு பொன்னிறமான மஞ்சள் வெயில் அழகாய்ப் படிந்திருக்கும் தருணத்தில் சிறுகுளத்திற்கு வந்து சேர்ந்ததையும் பற்றி விஸ்தரிப்பதனாவசியம். சம்பந்திகள் வந்து அவர்களுக்கேற்பட்ட ஜாகை யில் இறங்கினவுடனே மாப்பிள்ளையை அழைப்பதற் காக இரட்டைக்குதிரை சாரட்டு வந்து நின்றது. அது ஒரு ஜமீன்தாரிடமிருந்து கலியாணத்திற்காக முத்துஸ்வாமி அய்யரால் வரவழைக்கப்பட்டது. அது சிறுகுளத்தில் அறியப்படாத ஒர் பெரிய அதி சயம். அது முதல் முதல் அவ்வூர் மந்தையில் வந்து சேர்ந்தவன்றைக்கு அவ்வூர் முழுவதும் அதைப் பார்ப்பதற்காக வந்து கூடிப்போய்விட்டது. அது