பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



கலியாண முகூர்த்தம் - 'கலகாஸ்பதம்' 77 கோஞ்சஜன்னத்து பம் பசய்யப்படாாகள் முன்னதப்படி வந்து நின்றவுடன் ஸ்ரீநிவாசன் அதன் மேல் ஏறி கம் பீரமாய் உட்கார்ந்து கொண்டு எல்லா ஜனங்களும் தன்னையே பார்க்கிறார்கள் என்பதில் வெகு திருப்தி யடைந்தவனாய்ச் சென்று மாளிகை போன்ற தன் மாமனார் அகத்து வாசலில் இறங்கி தக்கபடி உள்ளே யழைத்துக்கொண்டு போகப்பட்டான். கிரமப்படி வேதவேதியர், தேவகணங்கள் இவர்கள் முன்னிலையில் அக்கினி சாட்சியாகச் செய்யப்பட வேண்டியவைகள் எல்லாம் நடந்து ' பம் பம்' என்று கிருஷ்ணபகவான் பாஞ்சஜன்னியத்தை துவனம் பண்ணியதுபோல் மேளவாத்தியத்தில் தனக்கு உயர்வு ஒப்பில்லையென்று கீர்த்தி பெற்ற கீவளூர்க் கந்தன் செய்த மங்கள வாத் தியத்துடன் மாங்கலிய தாரணமும் ஆயிற்று. முகூர்த் தம் ஆன பிறகு ஆசீர்வாதத்திற்கு எத்தன மாய் எல் லாரும் வந்திருக்கும் தருணத்தில் திடீரென்று ' ஐயோ ஐயோ ஐயோ!' நீ நாசமாய்ப்போக; உன் கையை முறித்து அடுப்பில் வைக்க ; நீ கட்டையிலே போக, நீ கரியாகப்போக, உன் அப்பன், ஆத்தாள், மாமன், மச்சுனன், பிள்ளை, பேரன், பேத்தி, அத்தான், அம் மாஞ்சி (அம்மான் சேய்) எல்லாரும் பூண்டோடு காச மாய்ப்போக ; ஐயையோ ஐயையோ!' என்றிப்படி ஓர் பெரிய கூக்குரல் உண்டாக, எல்லாரும் திடுக்கிட்டு வெளியே ஓடினார்கள். அங்கே, ' போடீ அந்தப் பக்கம். எழுந்திருக்கிறாளா பார்! போட்டா, அலகில் கையைப்பிடித்திழடா சரசரவென்று. மொட்டை முண்டையை குத்தடா, வெட்டடா, அடியடா , தள் ளடா, போகிறாயோ மிதிக்கட்டுமாடி, அப்புறம், மிதித்தே விடுவேன். இன்னும் நாலுமொத்து மொத்தி விடுவேன்' என்றிப்படி ஒவ்வொருவரும் கூவிக் கொண்டு நின்ற ஒரு பெரிய கூட்டத்தின் நடுவில் கீழே தள்ளப்பட்டவள் போல் ஒருகை கீழே ஊன்றி தரையை நோக்கி சாய்ந்த உடலும், நீட்டிய காலும், மேல் துணி நீங்கிய கிழட்டு மார்பும், முட்டாக்கு நீங்கிய