பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



80 கமலாம்பாள் சரித்திரம் வெட்டரிவாள் என்று சொல்லுகிறான்' என்றும் சொல்லாததுபோல் சொல்லுவது வழக்கம். இட் பொழுது கல்யாணப் பந்தலுக்கு முன் அவள் இருந்த நிலைமையை முத்துஸ்வாமி அய்யர் பார்த்த மாத்திரத் தில் அறிந்து கொண்டு அவளிடம் வரவே இருபுறமும் ஜனங்கள் விலகினார்கள். நடந்த சங்கதி என்ன வென்றால், அவள் வழக்கம்போல் கிராம பிரதட்சணம் செய்து கொண்டு வருபவள் போல் வரும்போது கலி யாணத்திற்கு வந்திருந்தவர்களில் ஒருவன் உள்ளூர்ப் பிள்ளைகளால் தூண்டப்பட்டு அவளைப் பெயரிட் டழைக்கவே, அவள் வழக்கம் போல வைய ஆரம்பித் தாள். அவன் 'கலியாணப் பந்தலுக்கருகே வையாதே' என, அவள் அதுதான் சமயமென்று , ' உன் கல்யாண மும் கண்டது இன்னொன்றும் கண்டது. உன் கல் யாணத்தில் இழவுவிழ' என்று வையவே, அங்கிருந் தவர்களில் ஒருவனுக்குக் கோபம் வந்து அவளைப் போவென்று பிடித்துத் தள்ளினான். அவள் கீழே விழுந்து மறுபடி யதிகமாய் வையவே கூட்டம் கூடி விட்டது. சிலர் வைதார்கள், சிலர் அடித்தார்கள், அவள் என்ன பண்ணியும் அவ்விடம் விட்டுப் போகாத தால் ஒருவன் அவளை ஓங்கியறைந்தான். அதனால் அவள் பெரிய கூக்குரல் போட்டாள். அதைக் கேட் டுத்தான் உள்ளே இருந்தவர்கள் எல்லாரும் ஓடிவந் தார்கள். முத்துஸ்வாமி அய்யர் அவளிடம் சென்று, ' இது என்ன பாட்டி இது' என, அவள், ' அப்பா முத்துஸ் வாமி, வந்தாயா மகாராஜனா யிருப்பாயப்பா. இந்தச் சனியன்களெல்லாம் என்னைப்போட்டு மொத்துகின் றன (அழுகிறதாக பாவனை பண்ணிக்கொண்டு) இதோ பார் இங்கே காயம், இங்கே காயம்' என்று அவர் கையைப் பிடித்துக்கொண்டு அவள் மார்புப்பக்கம் கொண்டுபோக அவர் கையைப் பின்னிழுத்துக்