பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



92 சமாம், கமலாம்பாள் சரித்திரம் மைக் காப்பாற்றினாள் என்று அவருக்கு சந்தோஷம். அவர் அவளை பைத்தியக்காரி என்றவுடன் கிருஷ்ணய் யர் 'அவள் பைத்தியக்காரிபோல் தோன்றவில்லையே' என, முத்துஸ்வாமி அய்யரும் சற்று மனங்கலங்கி, 'அரைப்பைத்தியக்காரி, வந்த காரியம் வேறு. அப் புறம் சொல்லுகிறேன். தஞ்சாவூராளுடைய சேஷ்டை இது' என்றார். ராமசுவாமி சாஸ்திரிகள், 'ஆனாலும் இப்படி செய்வாளா' என, முத்துஸ்வாமி அய்யர், 'அவளா! அவள் எல்லாம் செய்வாள் மாமா' சரிதான் கழுதையை விட்டுத் தள்ளுங்கள், உள்ளபடி இருக் கிறது. எல்லாவற்றிற்கும் மீனாட்சிதான் காப்பாற்ற வேணும். அவள் மேலே பாரத்தைப் போடுவோம். உள்ளே வாருங்கள், (உரக்க) எல்லாரும் உள்ளே வர வேண்டும், தயவுபண்ணவேணும்' என்று சொல்லிக் கொண்டு எல்லாரையும் உள்ளே கூட்டிச்சென்றார்.