பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



10 கல்யாண 'தடபுடல்' இது நிற்க, மணவறையிலிருந்த ஸ்ரீநிவாசன் தனக் குக் கல்யாணம் நடக்கிறதென்பதை நினைத்துத் தன் மனதுக்குள் பெருமைப்பட்டது இவ்வளவு அவ்வளவு என்பதில்லை. தன்னருகில் ஒரு லட்சணமான பெண் தன் மனைவியாக உட்கார்ந்திருப்பதை நினைக்க அவ னுக்கு உள்ளம் பூரித்தது. புதிதாய் பட்டாபிஷேக மாகும் ராஜகுமாரனுக்குக்கூட அவ்வளவு சந்தோஷ மும் கர்வமும் இருக்காது. அவன் தன் ஆசனத்தில் கம்பீரமாய் கொஞ்சம்கூட முதுகை வளைக்காமல் நிமிர்ந்தபடியே உட்கார்ந்தான். அங்கவஸ்திரத்தை இழுத்து இழுத்து அடிக்கடி சீர்திருத்திக்கொண்டான். தன் வலதுகையால் முகவாய்க் கட்டையைப் பல முறை தடவினான். அடிக்கடி தொண்டையைத் திருத் திக்கொள்பவனைப்போல் கர்ச்சித்து இருமினான். சில வேளை தன் இரண்டு கைகளாலும் முழந்தாளைக் கட் டிக்கொண்டு யானை ஆடுவது போல் மெதுவாய் ஆடி னான். சிலவேளை தன் விரல்களால் கீழே வெகு விரை வாய் இங்கிலீஷில் எழுதினான். ஒவ்வொரு வேளை தன் முகத்தைத் தன்னருகிலிருந்த சுப்பராயனை நோக்கி அழகாய்த் திருப்பிக்கொண்டு சில சில வார்த்தைகளை இங்கிலீஷில் பேசினான். ஹோமம் செய்யும்போது புகை யுடன் பழகாத தன் கண்களில் ஜலம்வர அதை அங்க வஸ்திரத்தால் துடைக்காமல் தன் விரலால் சுண்டி எறிந்து கொண்டு சுப்பராயனை நோக்கி தன் பெண் டாட்டி காதில் பட 'ஆநந்தபாஷ்பம்' என்று சொல் லிக்கொண்டான். ஏதோ புதுமையைக் கண்டவன் போல அடிக்கடி புன்சிரிப்புச் சிரித்தான். நேற்றுவரை