86 கமலாம்பாள் சரித்திரம் பார்வையுமே எங்கும் தோன்றி விளங்கியது. அவ் வாறு தோன்றுந்தோறும் அவள் சந்தோஷத்தால் உடல் பூரித்தாள். ஸ்ரீநிவாசனுக்கு உண்டான ஆநந் தத்திற்கு அளவு இல்லை. அவனுடைய கண்கள் தேனுண்ட வண்டுகள் போலச் சந்தோஷத்தால் சலித்து அவனுடைய மனக்களிப்பை வெளிப்படுத் தின. லட்சுமியின் இனிமையான முகத்தில் புஷ்பித்த மெல்லிய மந்தஹா ஸமும், 'கஞ்சத்தினளவிற்றேனும் கடலினும் பெரிய கண்கள்' என்ற லட்சணத்திற்குப் பொருந்திய அவளுடைய விசாலமான கண்களும் இவன் உள்ளத்தை அடிமைப் படுத்தின. ' என்ன அன்பு! என்ன அன்பு! என்னைப்பார்த்து அவள் சிரித்த சிரிப்பு ஒன்று போதாதா?' என்று அவன் நினைக்குந் தோறும் அமிர்தம் உண்டவன்போல சந்தோஷமடைந் தான். இவ்வாறு இருவரும் பரஸ்பர தரிசன ஆநந்த வெள்ளத்தில் மூழ்கித் தங்கள் தங்கள் நிலைமை தெரி யாது மயங்கியிருந்தார்கள். இதற்குள் குப்பிப்பாட்டி யின் திருக்கூத்து முடிந்து எல்லாரும் திரும்பிவிட்டார் கள். ஆதலால் பெண்ணும் மாப்பிள்ளையும் மறுபடி ஒருவரையொருவர் பார்த்துச் சந்தோஷிக்க சமயம் வாய்க்கவில்லை. ஆனால் லட்சுமி தன் கழுத்தில் நூதன காந்தியுடன் விளங்கும் திருமங்கல்யத்தை அடிக்கடி தொட்டுத் தொட்டுப் பார்த்துக்கொண்டிருந்தாள்.. அதை ஜாடையாய்க்கண்ட ஸ்ரீநிவாசன் தன்மேலுள்ள அன்பை அவள் அவ்விதம் வெளியிட்டாளென்றும் அதைத் தொடும்போதெல்லாம் அதற்கு மெதுவாய் அவள் ஒரு முத்தம் கொடுத்தாள் என்றும் நினைத்துக் கொண்டான். அது உண்மையோ அல்லவோ என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அது முதல் ஸ்ரீநிவாஸன் தன்னுடைய இரட்டைப் பூனூலையும் பஞ்சகச்சத்தை யும் அடிக்கடி கோதி விட்டுக்கொண்டான் என்பது வாஸ்தவம், அதுவுமன்றி ஆசீர்வாதம் முடிந்து எழுந் திருக்கும் தருணத்தில் முன் ஒருவரிடமிருந்து ஒருவர்