பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



'பொண்ணுமாப்புள்ளையும் பொயுந்திக்கையாயியுக்கு' 87 ஒரு முழதூரந் தள்ளியிருந்த தம்பதிகள் இப்பொழுது எப்படியோ ஒருசாண் தூரத்திற்குள்ளாக வந்துவிட் டார்கள். கடைசியாக எழுந்திருந்தபோது ஸ்ரீநிவாசன் தன் அங்கவஸ்திரத்தைச் சரியாகத் தரித்துக்கொள் பவன் போல், வேண்டுமென்றே லட்சுமியின் மீது மெது வாய் வீசியதை அவ்விருவரையும் சலியாத கவனத் துடனும் அடங்காத சந்தோஷத்துடனும் பார்த்துக் கொண்டிருந்த சுப்பராயன் கண்டான். அன்று சாயந்திரம் வழக்கப்படி கூடிய வம்பர் மகாசபையில் சுப்பம்மாள், ' என்ன புள்ளை (பிள்ளை) அணிப்புள்ளை தென்னம்புள்ளை. கொழந்தைகளியுந் தால் முத்துசாமியாத்து மாப்புளையைப்போல இயுக்க வேணும், இல்லாவிட்டா அதுக்கு பியக்கவே பிடாது' என்று (பாணினியில் கூட இல்லாத *ரயயோரபேத என்ற சூத்திரவிதிப்படி) வெகு கண்டிப்பாய் உத்தரவு செய்தருளினர். உடனே நாகு ' ஏன், பொண்ணுக்குத் தான் என்ன! பொண் இன்னாப்பிளே நன்னா யில்லையோ ' என, வேம்பு 'என்னைக் கேட்டால் மாப் பிள்ளையை விட பொண்ணு- கல்யாணி (லட்சுமி) மூக்கும் முழியும், அவள் சிரிக்கிறது ஒன்று போதாதா' என்றாள். உடனே சுப்பு ஆவேசம் வந்தவள் போல் கைகளை வீசி 'இந்தா அதெல்லாம் எனக்குத் தெரி யாது. பொண்ணும் மாப்புள்ளையும் நன்னாப் பொயுந் திக்கையாயியுக்கு. இந்தா அவாத்திலே பண்ணி னாளே பனமயம்போலே மாப்புள்ளையும் மயப்பாச்சி போல பொண்ணும்' என்றாள். எதார்த்தத்திலேயே ஸ்ரீநிவாசனுக்கு லட்சுமி அழ கில் குறைந்தவளில்லை. அவளுடைய அழகாயமைந்த அங்கங்கள் செவ்வையாய் சுருதி கூட்டிய வீணையின்

  • ரயயோ : + அபேத : = ரகரத்திற்கும் யகரத்திற்கும் பேதமில்லை .