பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூல் முகம் வில்லால் இலங்கை மலங்க சரம்துரந்த வல்லாளன் பின்போன நெஞ்சம் வரும் அளவும் எல்லோரும் என்தன்னை ஏசிலும் பேசிடினும் புல்லாணி எம்பெருமான் பொய்கேட்டு இருந்தேனே." --திருமங்கையாழ்வார் உள்ளம் மகிழ உரைநா அமுதுறக் கொள்ளும் இருகாதும் குளிரவே-தெள்ளரிய செந்தமிழ்க் கம்பத் திருநாடன்செய் நூலுக்கு எந்தநூ லாகும் இணை' என்று கவிமணி தேசியவிநாயகம் பிள்ளை சிறப்பித்துக் கம்பனைப் பல்லாண்டுகளாக அநுபவித்து வருகின்றேன். காரைக்குடிக் கம்பன் அடிப்பொடியுடன் தோழமை கொண்டு காரைக்குடியில் வாழ்ந்த பொழுது (1950.1960) கம்பனில் ஆழங்கால்பட்ட நிலையில் குமரி மலர் ஜனநாயகம்’ *தினமணிக் கதிர் தமிழ் நாடு ஞாயிறு மலர்' போன்ற இதழ்களில் பல கட்டுரைகள் வெளிவந்தன. சிலவற்றைத் தொகுத்துக் கம்பன் படைத்த சிறு பாத்திரங்கள் என்ற தலைப்பில் நூலாக வெளிவரச் செய்தேன்". வேறு தனி நூல் களில் சேர்ந்தவை போக எஞ்சிய பதினெரு கட்டுரைகள் இந்நூலில் இடம் பெற்று இப்போது வெளி வருகின்றன. சற்றேறக்குறைய ஏழாண்டுகளாக உறங்கிக் கிடந்து இப்போது, 1 பெரி-திரு. 9. 4, 5 2. மலரும்:மாலையும்-கம்பர்-17 3 நாவலர் புத்தக நிலையம், 59, மேலாவணி மூலவீதி மதுரை-825 092. (1979)