பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 கம்பனில் மக்கள் குரல் குர்ப்பனகை இலங்கைக்கு வருகின்ருள்; நடந்ததை யெல்லாம் தன் அண்ணனிடம் கூறுகின்ருள். தன்னை அங்கப்பங்கப் படுத்தினவர் மனிதர் என்றும், அவர்களுடன் உறையும் அழகுடை நங்கையைத் துரக்க முயன்றபோது இச்செயல் நேரிட்டது என்றும் கூறி மெதுவாக வத்தி’ வைக்கின்ருள்.சீதையின் அழகைப் பலவாறு விரித்துரைத்து இராவணனுக்குக் காம மயக்கத்தை ஏற்றி விடுகின்ருள், மஞ்சுஒக்கும் அளகம் ஓதி: மழைஒக்கும் வடித்த கூந்தல் பஞ்சுஒக்கும் அடிகள் செய்ய பவளத்தின் விரல்கள் ஐய!' (மஞ்சு - மேகம்; ஓதி - கூந்தல்) என்று வர்ணிக்கின்ருள். தோளையே சொல்லு கேனே சுடர்முகத்(து) உலவு கின்ற வாளையேசொல்லு கேனே வல்லவை வாழ்த்து கேனே" சுடர் கத்து உலவும் வாளே - வாளை மீன் முக, போன்ற கண்கள்; என்று கூறி மேலும் அவளது காம உணர்வைக் கிளர்ந் தெழச் செய்கின்ருள். இத்தகைய அவளே இராவணன் அநுபவிக்கும்பொருட்டுத் தான் தூக்க முயன்றபோது இலக்குவன் இவ்வாறு செய்து விட்டான் என்று முறையிடு கின்ருள். இராவணனுக்கு இவ்வாறு அவள் ஊட்டிய காம மயக்கம் உச்ச நிலையை அடைந்து விடுகின்றது. அவன் அன்ைத்தையும் மறந்து விடுகின்றன். 4. மாரீசன்வதைப். 70 5. டிெ-73