பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறைவைத்த காதல் 87 கரனையும் மறந்தான்; தங்கை மூக்கினைக் கடித்துகின்ருன் உரனையும் மறந்தாள்; உற்ற பழியையும் மறந்தாள்; வெற்றி அரனேயும் கொண்ட காமன் அம்பிளுல் முன்பு பெற்ற வரனையும் மறந்தாள்; கேட்ட மங்கையை மறந்திலாதாள்" [தங்கை மூக்கை கடித்து நின்ருன் - இலக்குவன்: உரன் . வலிமை; பழி - அபகீர்த்தி; அரனேயும் வெற்றி கொண்ட காமன் அம்பு - மன்மத பாணம்; முன்பு பெற்ற வரன் - சிறந்த வர பலம்! ஆனல் கீதையை மட்டும் மறக்கவில்லை. சீதை என்னும் பெயரும் அவன் மனமும் பிரிய முடியாதபடி ஒன்ருய்ப் போய் விடுகின்றது. சீதையின் உருவத்தை இதயமாகிய சிறையில் வைத்து விடுகின்ருன். மயிலுடைச் சாய லாளே வஞ்சியா முன்னம் நீண்ட எயில்உடை இலங்கை நாதன் இதயமாம் சிறையில் வைத்தான் |எயில் - மதில்! என்று கம்பன் நமக்கு அறிவிக்கின்ருன். மாயமான ஏவி இராம லட்சுமணர்களைச் சீதையிடமிருந்து பிரித்து ஒரு முனிவர் கோலங் கொண்டு பர்ணசாலையுடன் பெயர்த்துக் கொண்டு சென்று வஞ்சனேயாகச் சிறை வைப்பதற்கு முன்னமேயே இராவணன் மயில்போன்ற சாயலையுடைய 6. மாரீசன் வதைக3ே 7, டிெ 器5件