பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 கம்பனில் மக்கள் குரல் சீதாபிராட்டியைத் தனது மனமாகிய சிறையில் வைத்து விடுகின்ருன். இவ்வாறு அவன் கொண்ட காதல், விதியது வலியி ஞனும் மேலுள விளைவி னுைம் பதியுறுகேடு வந்து குறுகிய பயத்தி னுைம்" (பதி ஊர் (இலங்கை) கேடு - கெடுதல்; பயத்தி ஒலும் - பயலுைம்! கல்வி ஞானமில்லாத பேதை ஒருவன் மறைவாகச் செய்த தீவினை வளர்ந்து பிறர்க்குப் புலனுதல்போல முதலில் மனத்தில் நிலைத்தாலும் பின்பு ஐம்பொறிகளிலும் பரவி அது வெளிப்படலாயிற்று. நாளடைவில் அக்காதல் இராக்கத உருவத்தை அடைந்து விடுகின்றது. இவ்வாறு தனது குலத்துக்கே அழிவைத் தேடியதை வீடணன் நன்கு உணர்ந்திருக்கின்ருன்: வேண்டுமென்றே, பழி தீர்க்கும் கருத்தினவே, அழிவைத் தேடினளோ சூர்ப்பணகை என்று கூட ஐயப்படுகின்ருன். இராவணன் இறந்த பிறகு சகோதர வஞ்சையால் புலம்பும் வீடணன், கொல்லாத மைத்துனனைக் கொன்ருய்(என்று) அதுகுறித்துக் கொடுமை சூழ்ந்து பல்லாலே இதழ்(அ)துக்கும் கொடும்பாவி நெடும்பாரில் பழிதீர்ந் தாளோ? என்று சொல்லி அழும்போதுதான் இவ்வையப்பாடு வெளிப்படுகின்றது. இராவணன் மனச்சிறையிலிட்ட காதலின் விளைவுகளை அளவிட்டுச் சொல்ல முடியாது. இ. மாரீசன் வதை.86 9. இராவணன் வதை-225