பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறைவைத்த காதல் § { என்று சொல்லி அழுகின்ருள், சீதை மண்டோதரிக்கு அமிழ்தத்தில் தோயப்பெற்ற நஞ்சாகவல்லவா காட்சி யளிக்கின்ருள்? இன்று தன் மகனுக்கு நேர்ந்த கதிதானே நாளேக்குத் தன் கணவனுக்கும் நேரிடப்போகின்றது என்றல்லவோ அஞ்சுகின்ருள்? என்ன செய்வது? மண்டோதரி அஞ்சியவாறே இலங்கை வேந்தனும் இராமன் செலுத்திய மலரவன் அம்பால் மடிந்து விடு கின்ருன். இதனைக் கம்ப நாடன், முக்கோடி வாழ்நாளும் முயன்றுடைய பெருந்தவமும் முதல்வன் முன்னுல் எக்கோடி யாராலும் வெலப்படா எனக்கொடுத்த வரமும் ஏனைத் திக்கோடும் உலகனைத்தும் செருக்கடந்த புயவலியும் தின்று மார்பில் புக்கோடி உயிர்பருகிப் புறம்போயிற்(று) இராகவன்றன் புனித வாளி " (முதல்வன் . பிரமன், செருக் கடந்த போரில்ை வென்ற; புயவலி-புஜபலம்; புக்குஓடி-புகுந்து ஒடி; புறம்.வெளியே; புனிதவாளி-பரிசுத்த மான அம்பு) என்று நமக்கு அறிவிக்கின்றன். பகைமையை விட்டுத் தமயனுக்கு ஈமக் கடன் செய்யும்படி வீடணனை இராமன் ஏவ, அவனும் ஒரு மலையின்மீது மற்ருெரு மலை வீழ்ந்தது என்று சொல்லும்படி இராவணன் உடலின்மீது வீழ்ந்து புலம்புகின்ருன். 'உண்ணுதே உயிர்உண்ணு(து) ஒருங்ஞ்சு சனகியெனும் பெருநஞ்(சு) உன்னக் கண்ணுலே நோக்கவே போக்கியதே உயிர்கீயும் களப்பட் டாயே' 18. இராவணன் சோகம்-53 14, இராவணன் வதைப்-220