பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o கம்பனில் மக்கள் குரல் என்று சொல்லிப் புலம்புகின்ருன் உட்கொள்ளாமல் ஒரு நஞ்சு உயிரைக் கொல்ல மாட்டாது. அதற்கு மாருகச் சானகி என்ற பெரு நஞ்சு உன்னைக் கண்ணுலே நோக்கிய மாத்திரத்தில் உன்னுயிரைப் போக்கி விட்டதே! நீயும் போர்க்களத்தில் உயிரொழிந்து கிடக்கின்றனயே!” என்றல்லவோ சொல்லி அழுகின்ருன்? சீதையை நஞ்சாக அன்ருே வீடணன் கருதியிருக்கின்ருன்? போர் தொடங்கு வதற்கு முன்னர் இராவணன் மந்திராலோசனை செய்த போதுகூட இல்வீடணன் சீதையை நஞ்சாகத்தான் பாவித்திருந்தான்; கும்பகருணன்கூட இக்கருத்தையே கொண்டிருந்தான். மந்திராலோசனையின்போது தான் எடுத்துக் காட்டிய உண்மையை இப்போதாவது அறிந்து உணர்த்திருப்பாளுே?’ என்று எண்ணுகின்ருன் விபிடணன். ஓராதே ஒருவன்றன் உயிராசைக் குலமகள்மேல் உற்ற காதல் தீராத வசையென்றேன் எணமுனிந்த முனிவு ஆறித் தேறி ஞயோ?" [ஒராது.ஆராய்ச்சியின்றி, உயிராசை குலமகள். உயிர் போனுல் விருப்பிற்குரிய குடிப் பிறந்த பெண்; வசை-பழி; முனிவு-கோபம்} ஆராய்ச்சியின்றி ஒருவனுடைய உயிர் போன்ற உயர் குடிப் பிறந்த பெண்ணிடத்துப் பொருந்திய காதல் தீராத பழியை விளைவிக்கும் என்று கூறினேனே. அப்போது என் மீது காட்டிய சினம் இப்போதாவது தணிந்து அவ்வுண் மையை அறிந்தாயோ?” என்றல்லவோ சொல்லியிருக் கின்ருன் விபீடணன். போர்மகளைக் கலைமகளைப் புகழ்மகளைத் தழுவியக்கை பொருமை கூரச் சீர்மகளைத் திருமகனைத் தேவர்க்குங் தெரிவரிய தெய்வக் கற்பின் 15. இராவணன் வதைப்-221