பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறைவைத்த காதல் §3 யேர்மகளைத் தழுவுவான் உயிர்க்கொடுத்துப் பழிகொண்ட பித்தா பின்னைப் பார்மகளைத் தழுவினையோ திசையான பனையிறுத்த பணத்த மார்பால்' |போர் மகள்.வெற்றித் திருமகள்; கலைமகள்நாமகள்; புகழ் மகள்-கீர்த்தி மகள்; சீர் மகளைத் திருமகளை.சிறப்பு பொருந்திய மகளான இலக்குமி; தெரிவரிய-உணர்த்தற் கரிய, பேர் மகள்-புகழ் பெற்ற சீதா பிராட்டி; பித்தா-காமப் பித்தனே; பார் மகள்-பூமிதேவி; இறுத்த-முறித்த: பணேத்த பருத்த) என்று சொல்லிப் புலம்பும்போதுதான் வீடணின் துக்கம் உச்ச நிலையை அடைகின்றது. பைத்தியக்காரத்தனமாக கற்புக் கனலியைத் தழுவ நினைத்து இப்போது மண் மகளை யல்லவோ தழுவி நிற்கின்ரு ய்?’ என்று விடணன் கூறும் போது சோகத்தின் கொடுமுடியைக் காண்கின்ருேம். பிறகு இராவணன் உடல் கிடந்த இடத்திற்கு மண்டோதரி வருகின்ருள். அலைகளையுடைய கடலிலே மின்னல் வீழ்ந்தார்போலப் பொருந்தி விழுகின்ருள். கைலாய மலையையே தூக்கி எடுத்த அழகிய உடல் எள் இருப்பதற்குக் கூட இடம் இல்லாமல் துளைக்கப்பட்டிருக் கும் நிலையினைக் காண்கின்ருள். சீதாப் பிராட்டியைக் குறித்து மனமாகிய சிறையில் ஒளித்து வைத்திருக்கும் காதல் இருக்கும் இடம் எங்கே! எங்கே? என்று தேடுவதற் காகத்தான இவ்வாறு சல்லடைக் கண்களாகத் துளைத் திருக்கின்றது? என்று எண்ணுகின்ருள். அப்படியே சொல்லி மரங்களும் மலைகளும் உருகுமாறு வாய்விட்டு அழுது புலம்புகின்ருள். அவள் புல ம்புவதைக் கம்பன், 16. இராவணன் வதைப்.226