பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 | கம்பனில் மக்கள் குரல் வெள் எருக்கம் சடைமுடியான் வெற்புஎடுத்த திருமேனி மேலும் கீழும் எள்இருக்கும் இடம்இன்றி உயிர்இருக்கும் இடம்காடி இழைத்த வாருே? கள்இருக்கும் மலர்க்கூந்தல் சானகியை மனச்சிறையில் கரந்த காதல் உள்இருக்கும் எனக்கருதி உடல்புகுந்து தடவியதோ ஒருவன் வாளி?" |வெள் எருக்கம் சடை முடியான்-சிவபெருமான்; வெற்பு-மலை; இழைத்தவாருே-தேடிச் செய்த வகையோ; கள்-தேன்; ஒருவன்-ஒப்பற்ற இராமன்; வாளி அம்பு) என்று காட்டுகின்ருன் பஞ்சவடியில் கண்ட சீதையைக் குறித்துச் சூர்ப்பனகை ஊட்டிய காம மயக்கத்தால் சீதை யின்மேல் இராவணன் மனச் சிறையில் வைத்த காதலை’ இராமன் விட்ட மலரவன் படை துருவித் துருவித் தேடி விடுதலை செய்திருப்பதைக் கம்பநாடன் நமக்குக் காட்டு இன்முன். இலங்கை நாதன் இதயமாம் சிறையில் வைத்தக் காதலைத் தேடித்தான் இராவணனுடலை இராமன் அம்பு சல்ல டைக் கார்களாகத் துளைத் திருக் கின்றது என்று எவரும் ஒருகால் நினைக்கலாம் என்று காட்டுவதற்காகவே, கம்பன் மண்டோதரியை இராமன் அம்பு சானகியை மனச் சிறையில் கரந்த காதல் உள்ளிருக் கும் எனக் கருதித் தடவியதோ?’ என்று புலம்பிப் பேசும் படிச் செய்கின்ருன். சிறை வைத்த காதல் வெளிப்பட்ட விதத்தைக் கவிஞன் காட்டுவது பன்முறை சிந்தித்துப் பாராட்டி மகிழ்வதற் குரியதாகும். 1இெராவணன் விதைப்.239