பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ix மாரி கழைமுழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும் சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி மூரி கிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப் போதருமா போலே! வெளிவருகின்றது. 25 ஆண்டுகட்கு முன்னர் இவற்றைச் சுவைத்த அன்பர்களைப் போலவே இப்போதுள்ள பெரு மக்களும் சுவைத்து அநுபவித்தால் அதுவே நான் பெற்ற பேறு. இந்த நூலை அன்புடன் ஏற்று வெளியிட்ட அன்பர் *சிவகாசி மத்தாப்புபோல், ஒருசிரிப்பு வெளிச்சம் சிதறிக்' காட்டும் வானதி திருநாவுக்கரசு அவர்கள். எத்தனையோ தரமான நூல்களைத் தந்து வாசகர்களின் அறிவுவிடாயைத் தீர்த்து வைக்கும் வானதி’யுடன் இந்த நூலும் சேர்ந்து கொண்டது இந்நூல் பெற்ற பேறு. இதனை வெளியிட்ட அன்பர் அப்பருக்கு’ என் இதயம் கலந்த நன்றி என்றும் உரியது. மிக விரைவாக, ஆல்ை மிக அழகாக, அச்சிட்டு உதவிக் கற்போர் கைகளில் கவினுடன் திகழச் செய்த தமிழ் பற்ருளர் மூவேந்தர் அச்சகம் முத்து அவர்கட்கும் பிறருக்கும் என் அன்பு கலந்த நன்றியைப் புலப்படுத்திக் கொள்ளு கின்றேன். அண்மைக் காலமாக என் நூல்களெல்லாம் சென்னே உயர்நீதி மன்ற நீதிபதிகளின் அணிந்துரையுடன் வெளிவருகின்றன. இந்த நூலும் அம்மரபினில் வழு வாது வெளிவருகின்றது. ஜஸ்டிஸ் சு. இரத்தினவேலு பாண்டியன் அவர்கள் தமிழ் உலகுக்குப் புதியவர் அல்லர். ‘எங்கள் திருநெல்வேலி என்று மாவட்டப் பற்றுடன் பேசப்பெறும் திருநெல்வேலிச் சீமையிலுள்ள திருப் 4. திருப்பாவை-23