பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93 கம்பனில் மக்கள் குரல் லால், இவனே, ஆணியாய் உலகுக்கு எல்லாம் அறம் பொருள் நிரப்பும் அண்ணல் என்று சிறப்பித்தான் கவிஞர் கோமான். அறம் என்ற பொருள் தழைப்பதற்கு அநுமனே முதற் காரணன் என்பது கவிஞனின் குறிப்பு. பூவினை அதன் மணம் சிறப்பித்தல்போல் இராமகாவியத்தை அது மன் சிறப்பிக்கின்ருன். அவனது பேராற்றலும், அடலாண்மையும், சாதுரியப் பேச்சும், துTதின் சிறப்பும், ஏனைய குண நலன்களும் இராமகாதையைப் பயில்வார்க்குப் பேரின்பம் பயப்பனவாகும். இராம காதையில் இராமனது புகழினே ஆரா அமுதமாகச் சீராட்டி வளர்த்த பெருமை மாணி வடிவமாகவுள்ள வாயு புத்திரனைத்தான் சாரும் என்று கூறுவது எள்ளளவும் மிகையன்று. இத்தகைய சீரும் சிறப்பும் மிக்க அஞ்சனைக்குமரனைக் கம்பன் பல அழகிய சொற்ருெடர்களால் சிறப்பித்துப் பாராட்டுகின்ருன். கிட்கிந்தா காண்டம் மராமாப் படலத்திலிருந்து காவியம் நிறைவுபெறும் வரையிலும் கவி நாயகனது சிறப்பைக் கவிநாயகன் ஆங்காங்கு குறிப்பிட்டுச் செல்லுகின்ருன். சந்தர்ப்பங்களுக்கேற்றவாறு அது மனது குணதலங்கள் கனிந்து மணம் வீசுகின்றன. சுந்தரகாண்டம் முழுவதிலும் காவியநாயகளுகிய சக்கரவர்த்தித் திரு மகனின் அழகும் அகலகில்லேன் இறையும்’ என்று கூறி அவளுடன் காடுறை வாழ்க்கையை விரும்பிப் போந்த சீதாப் பிராட்டியின் அழகும் இனிது நுவலப்பெற்றிருப் பினும் சிறிய திருவடியாகிய அநுமனது புகழும் இடைப் பிறவரவாக ஓங்கி நிற்பதைக் கண்டு மகிழலாம். செவிக்குத் தேனென இராகவன் புகழினைத் திருத்தும் கவிக்கு நாயகன்." என்று கம்பநாடன் அநுமனேக் குறித்துச் செல்வதைக் காணலாம். இந்தச் சுவையான இனிய கவிதைப் பகுதி 2. சுந்தர ஊர்கேடு-132