பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவி நாயகன் 97 யினை எண்ணும்போது கம்பனைச் சுவைத்துத் தேக்கிட்ட நம் மனக்கண் முன்பு எண்ணற்ற காட்சிகள் தோன்றுகின்றன. அவற்றிற்கு வரி வடிவு தரின் அஃது ஒப்பற்ற ஓர் ஆராய்ச்சி நூலாக விரிந்து செல்லும். இராகவன் புகழினைக் செவிக்குத் தேனுக இனிக்கும் வண்ணம் திருத்திய பெருமையை இரு கவிநாயகரிடத்திலும் கண்டு களிக்கலாம். வான்மீகத்தி லுள்ள வரலாறுகளில் சிலவற்றைத் திருத்தி தமிழர்களின் மரபுக்கும் நாகரிகத்திற்கும் ஏற்றவாறு இராமகாதையை அமைத்த பெருமை கவிநாயகனகிய கம்பனுக்கு உரியது. இராமனது காடுறை வாழ்கையின் வரலாற்றில் நேர்ந்த சில பேராபத்துகளை நீக்கி அதனைச் செம்மையாக மாண் புறுத்திய பெருமை கவிநாயகராகிய வாயுபுத்திரனைச் சாரும். முன்னதைவிட்டுப் பின்னதில் நம் கருத்தினச் செலுத்துவோம். காடுறை வாழ்க்கைக் காலத்தில் இராமனது வரலாற்றில் எழுந்த கோணல்கள் எவை என்பதையும் அவற்றை நிமிர்த்தின அநுமனின் திறத்தினை யும் ஈண்டுக் களிப்போம். முதலாவது சீதாப் பிராட்டி பல திங்கள் களாக அரக்கியர்களால் நெருக்குண்டு மிகவும் மென் மருங்குல் போய் வேறுள அங்கமும் மெலிந்து கிடக்கின்ருள். புலிக் குழாத் தகப்பட்ட மானிளம் பேடைபோல், கண் களிமைத் தலையும் முகிழ்த்தலையும் துறந்து, வெயிலிடைத் தந்த விளக்கென ஒளியிலா மெய்யுடன் விளங்குகின்ருள். விழுதல் விம்முதல் மெய்யுற வெதும்புதல் வெருவல் எழுதல் ஏங்குதல் இரங்குதல் இராமனை எண்ணித் தொழுதல் சோருதல் துளங்குதல் துயருழந்து உயிர்த்தல் அழுதல் அன்றிமற் றயலொன்றும் செய்குவது அறியார்’ 3. கந்தர காட்சி க.-7