பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 கம்பனில் மக்கள் குரல் இங்கனம் அலமந்து இருந்துகொண்டே சுருதி நாயகன் வரும் வரும் என்பதோர் துணிவால் எண் திசைகளிலும் தன் பார்வையைச் செலுத்தி நிற்கின்றன். இங்ங்ணம் பிராட்டி அசோகவனத்தில் இருக்கும் நிலையைக் கம்பன், தேவு தென்கடல் அமிழ்ந்துகொண் டாங்கவேள் செய்த ஒவி யம்புகை புண்டாதே ஒக்கின்ற உருவாள்.' |தேவு - தெய்வத் தன்மையுள்ள: அனங்கவேள் . மன்மதன்.1 என்று அழகுறக் காட்டுவான், சுந்தர காண்டத்தின் காட்சிப் படலத்தில் இப்பகுதிகள் மிக உருக்கமாய் அமைந் துள்ளன. இந்நிலையில் இராவணன் பலவித விருதுகளுடன் பிராட்டியிருக்குமிடம் வந்து பலவிதமாகப் பேசித் தன் கருத்தை முற்றுவிக்குமாறு வேண்டியதையும், பின்னர் இலங்கை வேந்தன் ஆணப்படி அரக்கிமார் பலவாறு பயமுறுத்தியதையும், திரிசடை பிராட்டியாரைத் தேற்றி யதையும் மரத்தின்மீது மறைந்து நிற்கும் அநுமன் காண் கின்றன். பிறகு மந்திர வலியால் அரக்கிமார்களை உறங்கச் செய்கின்றன். அவர்கள் உறங்கவே, சதாப்பிராட்டி சந்திரனேயும் இரவையும் இருளையும் பூங்கொடிகளையும் பலவாருக விளித்துப் புலம்புகின்ருள். சென்ற நிகழ்ச்சிகளை யெல்லாம் மனத்திற் கொண்டுவந்து அசை போடுகிருள். நஞ்சனையான் அகம் புகுந்தமைக்கு நைந்து நைந்து'மருந்தும் உண்டுகொல் யான் கொண்ட நோய்க்கு என மயங்கு கின்ருள். பொறையிருந் தாற்றியென் உயிரும் போற்றினேன் அறையிருங் கழலவன் கானும் ஆசையால்" 4. சுந்தர. காட்சி-5 5. டிெ உருக்காட்டு-11