பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவி நாயகன் ئلاً (பொறை-பொறுமை: அறை-ஒலிக்கின்ற; என்று பேசுகின்ருள். இராமன் தன்னை மீட்ட பிறகு 'இற்புகத் தக்கலே’ என்று கூறினல் தன் கற்பு நிலையை எங்ங்னம் காட்டி மெய்ப்பிப்பது என ஏங்குகின்ருள். ஆதலால் இறத்தலே அறத்தின் ஆருெளுச் சாதல்காப் பவரும்என் தவத்தின் சாம்பினர் ஈதலாது இடமும்வேறு இல்லை என்று ஒரு போதுலா மாதவிப் பொதும்பர் எய்தினுள்." (ஆறு-வழி, தவம்-நல்வினை; சாம்பினர்-உறங்கினர்; பொதும்பர்-தோப்பு] இங்ங்னம் பிராட்டி தன்ன முடித்துக் கொள்ள முயலும் தருணத்தில் இராம நாமத்தைச் சொல்லித் தன்னை அண்டர் நாயகன் தூதன் என்று கூறி அவளது செயலைத் தடுத்து நிறுத்துகின்ருன் அநுமன். அங்ங்ணம் அதுமன் உற்ற சமயத்தில் செயத்தக்கதைச் செய்யாதிருப்பின் பிராட்டியார் நிலை என்ன ஆயிருக்கும் என்பதை நாம் அறி வோம். இராமனது பரக்கும் தொல் புகழும் அழிந்து பட்டிருக்கும். இங்ங்ணம் அழியாது முதற்கோணலை நிமிர்த்தின பெருமை அஞ்சனைச் சிறுவனச் சாரும். இரண்டாவது : இந்திரசித்து தொடுத்து விடுத்த அரவக்கணையால் அல்லோல கல்லோலப் பட்டுப் போயிற்று வானரச் சேனை. இலக்குவனும் நாகபாசத்தால் கட்டுண்டு சிடக்கின்ருன். வீடணன் புலம்புகின்ருன்; இராமனும் சோர்வுற்றுப் பேசாத நிலையை அடைகின்றன். ஆயின் இந்த அவல நிலையெல்லாம் கருடன் வரவால் மாறிவிடு கின்றது. வானரசேனேயினிடையே ஆரவாரம் கிளம்பு கின்றது. படைத் தலைவர்களைப் போருக்கு அனுப்பு கின்ருன் இராவணன். அவர்களும் அழிந்து படுகின்றனர். 6. சுந்தர உருக்காட்டு-21