பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

() i கவி நாயகன் i பழியும் காத்தரும் பகையும் காத்துஎமை வழியும் காத்தனை மறையும் காத்தனே' 'நன்னெறியில் விளங்கும் நாவலனே, நானும் எம்பி யும் தசரதன் மக்களாய் முன்பு பிறந்தோம்; இன்று நான் முகன் படையால் துஞ்சிளுேம்; இப்போது உன் மக்களாய்ப் பிறந்துளோம்; உயிர்போகும் காலத்தில் பிரிந்த உயி ரானது, தருகின்ற உயிரினல் தான் ஈடு செய்த தாகுமா? எங்கட்கு உயிர் கொடுத்து எம்மைச் சூழ இருந்த பழி யினைத் தடுத்து, அரிய பகைவரையும் அழித்திடும்படி அடக்கி, எம்மைக் குலத்தோடு காத்தாய். நாங்கள், உனக்கு என்ன கைம்மாறு செய்யப்போகின்ருேம்” என்று இராமன் உள்ளம் உருகப் பேசுகின்ருன். அந்த அருமை மொழிகள் இருவருடைய நிலைமைகளையும் இனிது விளக்கி இன்பம் சுரந்து நிற்கின்றன. இங்ஙனம் இராமன் வாழ்வில் நேர்ந்த இரண்டாவது கோணலை நிமிர்த்தினன் கவிநாயகன். மூன்ருவது , வீணைக் கொடியோனை வீழ்த் தி மிதிலைச் செல்வியை மீட்டிக் கொண்டு இராமன் அயோத்திக்கு மீண்டும் வருங்கால், இடையே பரத்துவாசரது ஆச்சிர மத்தில் தங்க நேரிடுகின்றது காடுறை வாழ்க்கையின் தொடக்கத்தில் கொடுத்த வாக்கினையொட்டி முனிவரின் விருந்தினளுகத் தங்கி விடுகின்ருன். எல்லோரும் விருந் துண்ணத் தொடங்குங்கால் விரைசெறி கமலக் கண்ணன் அநுமனே விளித்துச் சொல்லுகின்ருன்: இன்று காம்பதி வருதுமுன் மாருதி ஈண்டச் சென்று தீதின்மை செப்பிஅத் தீயவித்து இளையோன் கின்ற நீர்மையும் கினையும்t தேர்ந்து எம்மின் நேர்தல் கனறு." 7. யுத்த மருத்துவை-111; 112 3. யுத்த, மீட்சி-202